Oonjal, Then Chittu: முதல்வர் வெளியிட்ட பள்ளி மாணவர்களுக்கான ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள்; என்ன நோக்கம்?
பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த, 'ஊஞ்சல்', 'தேன்சிட்டு' இதழ்களையும் ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' இதழையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த, மாதம் இரு முறை இதழ்களாக, 'ஊஞ்சல்', 'தேன்சிட்டு' என்ற இதழ்களையும் ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' இதழையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
குழந்தைகளின் அறிவுக் கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக் கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களை பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்கிற இதழும் மாதம் இரு முறை இதழாக வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவற்றோடு வெளியிடப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறை அனுபவங்களோடும் அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடும் ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியிடப்பட்டுள்ளது.
#JUSTIN | ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்https://t.co/wupaoCQKa2 | #MKStalin #DMK #TNGovt pic.twitter.com/Y6CUmtmYil
— ABP Nadu (@abpnadu) October 12, 2022
’ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’ ஆகிய மூன்று இதழ்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியரும், இதழ்களைப் பெற்றுக்கொண்டனர். அப்போது தலைமைச் செயலாளர் இறையன்பு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கலந்துரையாடல்
போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நண்பகல் 1 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் ’ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’ ஆகிய மூன்று இதழ்களையும் மாணவர்கள் இடையேயும் ஆசிரியர்கள் இடையேயும் அறிமுகப்படுத்தி அவர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துரையாட உள்ளார்.
மேலும் படிக்க : "திருக்குறளை தீர்த்துக்கட்டவே தமிழ்நாடு வந்திருக்கிறார் போல ஆளுநர்" - முரசொலி கடும் விமர்சனம்
மேலும் படிக்க : "மழை மேம்... லீவு விட்டா கோயில் கட்றேன் என் மனசுல" - புதுக்கோட்டை ஆட்சியரிடம் இன்ஸ்டாவில் கெஞ்சிய மாணவர்கள்..!
TN Rain Alert: இன்னும் 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கப் போகுது கனமழை...! குடையோடு வெளியில போங்க..!