மேலும் அறிய

"மழை மேம்... லீவு விட்டா கோயில் கட்றேன் என் மனசுல" - புதுக்கோட்டை ஆட்சியரிடம் இன்ஸ்டாவில் கெஞ்சிய மாணவர்கள்..!

கனமழை காரணமாக விடுமுறை அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் நலன்கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு விடுமுறை கேட்டு அவரது சமூக வலைதள பக்கத்தில் மாணவர்கள் பலரும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சரமாரியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவர்களது கோரிக்கைகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிதா ராமு, ஹாஹா இன்ஸ்டாவில் சில செய்தி கோரிக்கைகள் என்று பதிவிட்டுள்ளார்.


அதில் ஒரு மாணவர் “ மேம், மார்க் வாங்கலனா எல்லாரும் கேப்பாங்க. உங்களையே நம்பி இருக்கேன். ஹெல்ப் மீ. எல்லாருக்கும் ஒருநாள் லீவு கொடுங்க. உங்களை மறக்கவே மாட்டேன். ஏஞ்சல்” என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு மாணவர், நாளைக்கு லீவு கொடுங்க கலெக்டர் அம்மா என்று பதிவிட்டு, கண்ணீருடன் கையெடுத்து கும்பிடும் செய்தியை அனுப்பியுள்ளார்.

மற்றொரு மாணவர் “ நாளைக்கு மட்டும் லீவு இல்லனா பைத்தியம் ஆயிடுவேன் போல. இங்க மழை பெய்யுது மேம். ப்ளீஸ்ஸ்ஸ்.. லீவ்வ்வ்.. லீவு மட்டும் விடுங்க மேம் உங்களுக்கு கோயில் கட்டுறேன் என் மனசுல.. படிச்சு, படிச்சு பைத்தியம் ஆயிரும்போல..” என்று பதிவிட்டுள்ளார்.


மற்றொரு மாணவர் “ நான் ஹாஸ்டல்ல தங்கி படிக்குறேன்.2 நாளா நேட்டிவ் ப்ளேஸ் போயிட்டேன். இப்போ ஹாஸ்டல் போக முடியல மேம். மழை மேடம் நாளைக்கு லீவு மேம் ப்ளீஸ்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த மாணவர்கள் அனுப்பிய செய்தி அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பகிர்ந்துள்ளார். இந்த செய்தி இப்போது வைரலாகி வருகிறது.  

மேலும் படிக்க : Madurai: “ஜெயலலிதா செய்ததை ஸ்டாலின் செய்ய தயங்குவது ஏன்? இது தலைமைக்கு அழகல்ல” - செல்லூர் ராஜூ

மேலும் படிக்க : Seeman: இது இந்திய நாடா? இந்தி நாடா? மத்திய அரசை சரமாரியாக வெளுத்து வாங்கிய சீமான்!

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருச்சி ஜங்ஷனில் நடைபாதை ஆக்கிரமிப்பு: சாலையில் நடக்கும் பயணிகள்; விபத்து அபாயம்!
திருச்சி ஜங்ஷனில் நடைபாதை ஆக்கிரமிப்பு: சாலையில் நடக்கும் பயணிகள்; விபத்து அபாயம்!
லாப ஆசை காட்டி பல கோடி சுருட்டல்! திருச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் தவிப்பு!
லாப ஆசை காட்டி பல கோடி சுருட்டல்! திருச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் தவிப்பு!
திருச்சி வழி ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்: என்ன காரணம்?
திருச்சி வழி ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்: என்ன காரணம்?
திருச்சி – கரூர் – கோவை இனி பக்கத்தில்தான்! 230 கி.மீ. புதிய 4 வழிச்சாலை... முக்கிய அறிவிப்பு!
திருச்சி – கரூர் – கோவை இனி பக்கத்தில்தான்! 230 கி.மீ. புதிய 4 வழிச்சாலை... முக்கிய அறிவிப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kolathur: கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
TN Weather News: இன்று கரையை கடக்கும் அக்வான் புயல்..! சென்னை, காஞ்சியில் மழை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கரையை கடக்கும் அக்வான் புயல்..! சென்னை, காஞ்சியில் மழை? தமிழக வானிலை அறிக்கை
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
Embed widget