மேலும் அறிய

Omicron Guidlines:ஓமைக்ரான்: பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு!

பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும் என்றும், இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டு பள்ளிகளில் ஓமைக்ரான் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உலகின் 30 நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று என்பதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும் என்றும், இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என்றும், கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டுக்குள் இன்னும் பரவவில்லை என்றும், சென்னை, திருச்சியில் இந்த தொற்று உறுதியானதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறு எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அமைச்சர் அளித்த பேட்டியில், “ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தேவைப்படாது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு ஓமைக்ரான் உள்ளதா என கண்டறிய மாதிரி பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்முடிவு வந்த பிறகே என்ன வகை கொரோனா என தெரியும். ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டுக்குள் இன்னும் பரவவில்லை. தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று பரவியதாக சமூக வலைத்தளங்களில் வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை. மூன்றாவது தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு தொடங்கினால் தமிழ்நாட்டிலும் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?" - முதல்வரை சாடிய கனிமொழி!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
Embed widget