மேலும் அறிய

NMMS Exam: 4 ஆண்டுக்கு மாதாமாதம் ரூ.1000: என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அரசு, அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 8ஆம்‌ வகுப்பு மாணவர்கள்‌ தேசிய வருவாய் வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ திட்டத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

8ஆம் வகுப்பில் இருந்து 4 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்விச் சட்டம் அமலில் உள்ளது. எனினும் ஏழை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க வேண்டும் என்னும் நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்து உதவித்தொகை வழங்க, என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு ( National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் யார் வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 2017ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மாதம் ரூ. 500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்தத்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. 

எனினும் 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, அடுத்த ஆண்டுக்கு உதவித் தொகை வழங்கப்படும். எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் scholarships.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* ஒருமுறை விண்ணப்பப் பதிவு படிவத்தை ( one-time registration - ORT) பூர்த்தி செய்யவும்.  

* https://scholarships.gov.in/otrapplication/#/login-page என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

* தேர்வர்களுக்கு ஆதார்/ ஆதார் சேர்க்கை ஐடி (EID) அடிப்படையில் 14 இலக்க எண் அனுப்பப்படும்.

* ஒருமுறை விண்ணப்பப் பதிவின் மூலம், ஸ்காலர்ஷிப் விண்ணப்பப் படிவத்தை ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* பிறகு https://scholarships.gov.in/ApplicationForm/#/login என்ற இணைப்பை க்ளிக் செய்து லாகின் செய்யலாம்.

தேசிய வருவாய் வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ திட்டத்‌ தேர்வு உதவித் தொகை குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண: https://scholarships.gov.in/public/schemeGuidelines/NMMSSGuidelines.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காண வேண்டும்.        

ஒருமுறை விண்ணப்பப் பதிவு குறித்து விரிவாக அறிந்துகொள்ள:

https://scholarships.gov.in/public/FAQ/Renewal%20Students%20FAQ%20V%201.1.pdf

விண்ணப்பித்த மாணவர்கள் லாகின் செய்து உள்நுழைய: https://scholarships.gov.in/ApplicationForm/#/login

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பிற உதவித்தொகைகள் குறித்து விரிவாக அறிய: https://scholarships.gov.in/All-Scholarships என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget