NIRF Ranking 2024: என்ஐஆர்எஃப் பட்டியல்; அண்ணா பல்கலைக்கழகத்தையே முந்திய 2 தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள்- எவை தெரியுமா?
NIRF Rankings 2024: ஒட்டுமொத்தப் பிரிவிலும் பல்கலைக்கழக அளவிலும் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தையே (Anna University) 2 பல்கலைக்கழகங்கள் முந்தியுள்ளன.
மத்திய அரசின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஒட்டுமொத்தப் பிரிவிலும் பல்கலைக்கழக அளவிலும் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தையே (Anna University) 2 பல்கலைக்கழகங்கள் முந்தியுள்ளன.
இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அமிர்த விஸ்வ வித்யபீடம், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் சிறப்பிடம் பெற்றுள்ளன. ஒட்டுமொத்தப் பிரிவில், முறையே 15 மற்றும் 17ஆவது இடங்களைப் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் 18ஆவது இடத்தையே பிடித்துள்ளது.
அதேபோல, பல்கலைக்கழக அளவில், முறையே 7 மற்றும் 10ஆம் இடங்களைப் பிடித்துள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழகம் 14ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. எனினும் பொறியியல் பிரிவில் விஐடிக்கு அடுத்த இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் தரவரிசைப் பட்டியலைக் காண https://webcast.gov.in/moe/ என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.