NIFT 2026: நிஃப்ட் நுழைவுத் தேர்வு விண்ணப்பப் பதிவு எப்போது? ஃபேஷன் டிசைன் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
12 ஆம் வகுப்பு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எழுதி இருக்க வேண்டும்.

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) 2026ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைமுறையை தேசியத் தேர்வுகள் முகமை (NTA) மூலம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், விண்ணப்பதாரர்கள் nift.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு, விண்ணப்பிக்கலாம்.
2024ஆம் ஆண்டில், NIFT 2025-க்கான விண்ணப்ப சாளரம் நவம்பர் கடைசி வாரத்தில் திறக்கப்பட்டது, எனவே இந்த ஆண்டும் இதே நேரத்தில் விண்ணப்பம் தொடங்க வாய்ப்புள்ளது.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.3000 ஆகவும், ஒதுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1500 ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட உள்ளது.
கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு
இளங்கலை மற்றும் முதுகலைத் திட்டங்களுக்கான கல்வித் தகுதிகள் வேறுபடுகின்றன. இருப்பினும் விண்ணப்பதாரர்கள் நிஃப்ட் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எழுதி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 24 ஆண்டுகள் ஆகும்.
NIFT நுழைவுத் தேர்வு முறை
- பேச்சிலர் ஆஃப் டிசைன் (Bachelor of Design):பொதுத் திறன் தேர்வு (ஆன்லைனில் 2 மணிநேரம்) + படைப்புத் திறன் தேர்வு (3 மணிநேரம் வரைதல்) + சூழ்நிலை தேர்வு (மாடல் தயாரித்தல்) தேவைப்படும். இதற்கு CAT 50%, சூழ்நிலை தேர்வு 20%, GAT 30% வெயிட்டேஜ் கொடுக்கப்படும்.
- பேச்சிலர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (Bachelor of Fashion Technology):நீண்ட GAT (3 மணிநேரம், கணிதம் அதிகம்) + நேர்காணல் (70:30 என்ற மதிப்பெண்களில்) மட்டுமே இருக்கும்.
- மாஸ்டர் ஆஃப் டிசைன் (Master of Design):BDes முறையைப் பின்பற்றும். ஆனால் நேர்காணலுடன் (50:30:20) முடிவடையும். GAT தேர்வில்25 எதிர்மறை மதிப்பெண் இருக்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் nta.ac.in/NIFT என்னும் அதிகாரப்பூர்வவலைத்தளத்தைப்பார்வையிடவும்.
- அதில் "NIFT 2026 பதிவு" இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- ஒரு உள்நுழைவு கணக்கை உருவாக்கவும் ("New Candidate" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்).
- தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.
கூடுதல் தகவல்களுக்கு: nift.ac.in






















