மேலும் அறிய

’’அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்’’ அன்பில் மகேஸை பொளக்கும் நெட்டிசன்கள்!

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் பற்றி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ள கருத்துக்கு, நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

கடந்த திமுக ஆட்சியில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாக அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ள கருத்துக்கு, நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்

முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ’’உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பின்படி அரசு நகராட்சி/ உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மற்றும் நிலை-1 ஆகிய பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணிநிரவல் செய்வது மற்றும் பகிர்ந்தளித்தல் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது.

அவ்வரசாணையின்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 1328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அரசாணை தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கைக்காகவும் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் இணைத்து அனுப்பப்பட்டது.

திராவிட மாடல் ஆட்சியில் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம்

இந்த சுற்றறிக்கையைப் பகிர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், ’’திராவிட மாடல் ஆட்சியில் உடற்கல்வி பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பணியிடங்களை உருவாக்கவும் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் (நிலை-2) பணியிடங்கள் புதிதாகத் தோற்றுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு முன்பே அரசாணை வெளியிட சுற்றாணைக் குறிப்பில் கையெழுத்தும் இடப்பட்டது. தற்போது அந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக 1328 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் (நிலை-2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மைதானமும் ஒரு வகுப்பறைதான்என்பதை உணர்ந்து மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியப் பெருமக்கள் வழிகாட்டுவார்கள்’’ என்று பதிவிட்டு இருந்தார்.

நெட்டிசன்கள் கேள்வி

இதுகுறித்து அவரின் எக்ஸ் பக்கத்திலேயே அந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள், ’’நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் இடைநிலை பேராசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி வந்தீர்களே உங்களை என்ன என்று சொல்வது?’’

’’கடந்த ஆட்சியில் எத்தனை இடைநிலை  ஆசிரியர் பணி வழங்க ஆணை  பிறப்பித்தீர்கள்? எல்லாமே தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பாடம் எடுத்தீர்கள். அதனால்தான் நீங்கள் தோல்வியை கண்டீர்கள்’’.

 ’’தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அரசாணையை திமுக அரசு வெளியிட்டாலும் தேர்வை நடத்தி ஆசிரியர்களை மாணவர்களின் நலனுக்காக நியமிக்க உள்ளது தவெக அரசுதான்’’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
Embed widget