மேலும் அறிய

NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!

NEET UG Result 2026: நீட் மறுதேர்வின் முடிவுகள் மற்றும் ஒட்டுமொத்த மாணவர்களுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் ஆகியவை இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன.

நீட் இளங்கலை மறுதேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவுகளுக்காக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளங்கலை மறு தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மற்றும் புதிய அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

தேசியத் தேர்வுகள் முகமை முன்னதாக மே 3ஆம் தேதி நடத்திய தேர்வில் முறைகேடு நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 21ஆம் தேதி அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து ஜூன் இறுதி வாரத்தில் தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 10 ஆயிரம் ஆட்சேபனைகள் வந்தன. அவை மதிப்பீடு செய்யப்பட்டு, இறுதி விடைக் குறிப்பு வெளியானது.

இந்த நீட் மறுதேர்வின் முடிவுகள் மற்றும் ஒட்டுமொத்த மாணவர்களுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் ஆகியவை இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன.

தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

  1. தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான nta.ac.in/NEET என்பதற்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள NEET UG Re test Result என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. மாணவரின் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் திரையில் தோன்றும் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.
  4. இப்போது திரையில் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் அகில இந்தியத் தரவரிசை விவரங்களுடன் கூடிய முடிவு காண்பிக்கப்படும்.
  5. இதனைப் பதிவிறக்கம் செய்து, மருத்துவச் சேர்க்கை நடைமுறைகளுக்காகப் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்தத் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மற்றும் இறுதிப் பட்டியல் வெளியான பின்னரே, மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மற்றும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே, மாணவர்கள் தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு (2027) முதல் கணினி முறையில் நீட் தேர்வு, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்க மேலும் அவகாசம்! ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்க மேலும் அவகாசம்! ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
Embed widget