மேலும் அறிய

PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு

நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

உதவிப் பேராசிரியர் பணிக்கும் இளநிலை ஆராய்ச்சிப் படிக்கும் இதுவரை நடத்தப்பட்டு வந்த நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு அடிப்படையில் இனி முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கு வெவ்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தன. இதனால் ஒரே தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இதுகுறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசியின் 578ஆவது கூட்டம் மார்ச் 13ஆம்தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் இருந்து நெட் தேர்வு அடிப்படையில், பிஎச்டி மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று யுஜிசி தெரிவித்துள்ளது. 

நெட் தேர்வு; ஓர் அறிமுகம்

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி மூலம் நடத்தப்படுகிறது. ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், 2024 ஜூன் முதல், நெட் தேர்வர்கள் 3 பிரிவுகளின் அடிப்படையில் தகுதிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. 

என்னென்ன பிரிவுகள்?

பிரிவு 1: இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகையோடு பிஎச்டி மாணவர் சேர்க்கைக்குத் தகுதி மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கும் தேர்வு

பிரிவு 2: இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை இல்லாமல் பிஎச்டி மாணவர் சேர்க்கைக்குத் தகுதி மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கும் தேர்வு

பிரிவு 3: பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு மட்டும் தகுதி, அதே நேரத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை, உதவிப் பேராசிரியர் பணிக்கும் தேர்வில்லை. 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.ugc.gov.in/pdfnews/3720447_PUBLIC-NOTICE-NET.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

தேர்வர்கள் இ- மெயில் முகவரி: ugcnet@nta.ac.in

கூடுதல் தகவல்களுக்கு https://ugcnet.nta.ac.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget