NEET UG Counselling: மாணவர்களே.. மருத்துவக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு- விண்ணப்பப் பதிவு எப்போது? முழு அட்டவணை இதோ!
மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்த இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி நாடு முழுவதும் ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது. அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14 முதல் 31ஆம் தேதி வரை முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
1.2 லட்சம் இடங்களுக்கு 23 லட்சம் பேர் போட்டி
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சுமார் 1.2 லட்சம் இளநிலை மருத்துவப் படிப்புகள் மொத்தமாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப சுமார் 23 லட்சம் மாணவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள், சொன்ன தேதிக்கு முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. இது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட முறைகேடுகள் புயலைக் கிளப்பின.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், வழக்கு விசாரணைக்குப் பிறகு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவக் கலந்தாய்வு
இந்த நிலையில், இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கான தேதிகளை மருத்துவத் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது. அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14 முதல் 31ஆம் தேதி வரை முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
2ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்கி செப்.22ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோல செப். 25 முதல் அக்.15 வரை 3ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4ஆம் சுற்றுக் கலந்தாய்வு அக்டோபர் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும். இது ஒட்டுமொத்த அளவில் 15 சதவீத இடங்களுக்கு நடத்தப்படும்.
விண்ணப்பப் பதிவு எப்போது?
இந்த நிலையில் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. கலந்தாய்வு, விண்ணப்பப் பதிவு குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு, மருத்துவத் தேர்வுக் குழு இணையதளத்தைக் காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.