NEET UG 2023: மாணவர்களே... நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி- விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ( பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
2023 நீட் தேர்வு எப்போது?
2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் விண்ணப்பப் பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடந்து, நாளை மறுநாளுடன் (ஏப்ரல் 6ஆம் தேதி) விண்ணப்பப் பதிவு முடிவடைய உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, neet.nta.nic.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைத் திருத்தம் செய்வது, ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்டவற்றுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினர் - ரூ.1700
உயர் சாதி பொதுப் பிரிவினர், க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி பிரிவினர் - ரூ.1600
எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் - ரூ.1000
இந்தியாவுக்கு வெளியே தேர்வு எழுதுவோர்- ரூ.9,500
இவற்றுடன் செயலாக்கக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவையும் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* விண்ணப்பப் படிவம் வெளியான உடன், தகுதியான தேர்வர்கள் nta.ac.in அல்லது neet.nta.nic.in ஆகிய இணையதளங்களுக்குச் செல்ல வேண்டும்.
* Candidate Activity என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில் NEET UG 2023 registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அங்கு திறக்கப்படும் பக்கத்தில் தேர்வர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் விண்ணப்பிக்க: https://examinationservices.nic.in/neet2023/root/home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFcFR+natXIEjJ1rCf6DMgOrFA4SfAMU1biZWfro5QnPt என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தொலைபேசி எண்: 011-40759000
இ- மெயில்: neet@nta.ac.in
மத்திய, மாநில ஒதுக்கீடு
நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாநிலக் கல்லூரி இடங்கள், சொந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.