NEET UG 2022 Admit Card: நீட் தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகாது; புதிய தேதி அறிவிப்பு
வரும் 17ம் தேதி நடைபெறும் இளநிலை நீட் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை நீட் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வர்கள் நாளை (ஜூலை 12) காலை 11.30 மணி முதல் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த முறை ஜூலை 17-ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. விண்ணப்பிக்காத தேர்வர்களுக்கு 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் நீட் தேர்வு விண்ணப்பங்களில் ஜூன் 16 வரை திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இளங்கலை நீட் தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 18,72,329 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். 8,07,711 ஆண் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல பெண் தேர்வர்கள் 10,64,606 பேர் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஜூலை 11) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வர்கள் நாளை (ஜூலை 12) காலை 11.30 மணி முதல் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டைத் தேர்வர்கள் எப்படிப் பதிவிறக்கம் செய்வது என்று பார்க்கலாம்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம்
* neet.nta.ac.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்யவும்.
* அறிவிப்புப் பகுதிக்குச் சென்று, admit card download என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்.
* தேர்வர்கள் தங்களின் சுய விவரங்களைக் கொண்டு லாகின் செய்யவும்
* அனுமதிச் சீட்டு எனப்படும் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும்.
* ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்யவும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
சமூக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி, 543 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெறுகிறது.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், www.nta.ac.in மற்றும் https://neet.nta.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்கலாம்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையும், neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்