மேலும் அறிய

NEET UG 2021: நீட் தேர்வு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு - விவரம் உள்ளே

ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள், 2021, 10ஆகஸ்ட் மாலை 5 மணிவரையிலும் கட்டணம் செலுத்துவது இரவு 11.50 வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு மதிப்பெண் B.Sc., Nursing பாடப்பிரிவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு காரணமாக, 2021 நீட் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள், 2021, 10ஆகஸ்ட் மாலை 5 மணிவரையிலும் கட்டணம் செலுத்துவது இரவு 11.50 வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும். 

வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது என்பதால், இந்த வாய்ப்பினை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.  

நீட் (இளநிலை) தேர்வு 2021, 12 செப்டம்பர் 2021 அன்று நாடு முழுவதும் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.     

EVENT

அறிவிக்கப்பட்ட தேதிகள்   

நீட்டிக்கப்பட்ட தேதிகள்  

விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளும் தேதி   13.07.2021 to 06.08.2021

13.07.2022 to 10.08.2021

(upto 05.00 p.m.)

Successful final

transaction of fee

02.12.2019 to 06.08.2021

(upto 11.50 p.m.)

13.07.2021 to 10.08.2021

(upto 11.50 p.m.)

B.Sc., Nursing பாடப்பிரிவு: 

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தங்களது சொந்த வழிமுறைகளைப் பின்பற்றி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மதிப்பெண் முடிவுகளை மத்திய/மாநில அரசு முகமைகள் பயன்டுத்திக் கொள்ளலாம்.  B.Sc Nursing Home பாடப்பிரிவுக்கும் கூட நீட் தேர்வு மதிப்பெண் முடிவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் முன்னதாக தெரிவித்திருந்தார்.  

Last Date for submission of application form of NEET (UG) – 2021 extended to 10th August 2021

இந்நிலையில், நீட் தேர்வு முறையில் பங்கு கொள்ளும் கல்லூரிகளின் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என டெல்லி பல்கலைக்கழகத்திடம் இணைக்கப்பட்ட செவிலியர் கல்லூரி ஒன்று தேசிய தேர்வு முகமையை அணுகியுள்ளது. இதனடிப்படையில், நீட் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது. 

நீட் தேர்வு:    

சமுக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் 2020-ல் இருந்த 3862-ல் இருந்து அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும், கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, அனைத்து தேர்வர்களுக்கும் மையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்படும். உள்ளே வர மற்றும் வெளியே செல்ல தனித்தனி நேரங்கள், தொடர்பில்லா பதிவுமுறை, முறையான கிருமி நாசினி நடவடிக்கைகள், சமூக இடைவெளியுடன் கூடிய அமரும் வசதிகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்படும்,” என்றும் தெரிவித்தார்.

நடப்பு கல்வியாண்டில் முதல் இடஒதுக்கீடு: 

நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. 

மேலும், வாசிக்க: 

7.5 reservation | தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு

பத்தாம் வகுப்பு பாஸா... போஸ்ட் ஆபிஸ் வேலை ரெடி! ஆகஸ்ட் 10க்குள்ள அனுப்பிடுங்க! 

தலைப்பு செய்திகள்

20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Embed widget