மேலும் அறிய

NEET Hall Ticket: நீட் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்- டவுன்லோடு செய்வது எப்படி?

NEET Hall Ticket 2022: நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை (ஜூலை 11) முதல் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த முறை ஜூலை 17-ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. விண்ணப்பிக்காத தேர்வர்களுக்கு 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் நீட் தேர்வு விண்ணப்பங்களில் ஜூன் 16 வரை திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 

இளங்கலை நீட் தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 18,72,329 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். 8,07,711 ஆண் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல பெண் தேர்வர்கள் 10,64,606 பேர் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2,57,562 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழில் தேர்வெழுத 31,803 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜூலை 11) வெளியாக உள்ளது. இதைத் தேர்வர்கள் எப்படிப் பதிவிறக்கம் செய்வது என்று பார்க்கலாம்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம்

neet.nta.ac.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்யவும்.
* அறிவிப்புப் பகுதிக்குச் சென்று, admit card download என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்.
* தேர்வர்கள் தங்களின் சுய விவரங்களைக் கொண்டு லாகின் செய்யவும்
* அனுமதிச் சீட்டு எனப்படும் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும்.
* ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்யவும்.


NEET Hall Ticket: நீட் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்- டவுன்லோடு செய்வது எப்படி?

பாதுகாப்பு நடவடிக்கைகள்

சமூக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி, 543 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெறுகிறது. 

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், www.nta.ac.in மற்றும் https://neet.nta.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்கலாம்.

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையும்,  neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
Tata Punch vs Hyundai Exter: டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
Life Insurance Tips: மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
Embed widget