மேலும் அறிய

Career Guidance: தேசிய நுழைவுத் தேர்வுகள்; மாணவர்கள் விண்ணப்பிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு

அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கான ஆலோசனைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் வகையில் அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கான ஆலோசனைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு கூறி, அவர்கள் விண்ணப்பிக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின் விவரங்கள், வகுப்புவாரியான கட்டண விவரங்கள் (Communal wise fee details), தகுதி வரம்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய முகவரி ஆகியவை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உயர்கல்வி வழிகாட்டல்‌

பள்ளிக்‌ கல்வித்‌ துறை உயர்கல்வி வழிகாட்டல்‌ மற்றும் நுழைவுத்‌ தேர்வு தொடர்பான தகவல்கள்‌ குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 12ஆம்‌ வகுப்பு படிக்கும்‌ அனைத்து மாணவர்களுக்கும்‌ உயர்கல்வி வழிகாட்டுதல்‌ மற்றும்‌ ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்‌ தொடர்ச்சியாக, ஆகஸ்ட்‌ 2023 முதல்‌ இக்கல்வியாண்டிற்கான உயர்கல்வி நுழைவுத்‌ தேர்வுகள்‌ குறித்த தகவல்கள்‌ வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

என்னென்ன தேர்வுகள்?

அதன்படி 2023 அக்டோபர்‌ மாதத்தில்‌, பொது சட்ட நுழைவுத்‌ தேர்வு (CLAT- Common Law Admission Test), அனைத்திந்திய சட்ட நுழைவுத்‌ தேர்வு (AILET), தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின்‌ வடிவமைப்பு திறன்‌ தேர்வு (NID - National Institute of Design - Design Aptitude Test) மற்றும்‌ வடிவமைப்பிற்கான இளங்கலை பொது நுழைவுத் தேர்வு (UCEED. Undergraduate Common Entrance Examination for Design) ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. 

இந்த நுழைவுத்‌ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின்‌ விவரங்கள்‌, வகுப்பு வாரியான கட்டண விவரங்கள்‌ (Communal wise fee details) தகுதி வரம்புகள்‌ மற்றும்‌ அதிகாரப்பூர்வ இணைய முகவரி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள நுழைவுத்‌ தேர்வுகளுக்கான தகவல்களை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ உயர்‌ கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள்‌ வாயிலாக 12ஆம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு அறியச்‌ செய்து விருப்பமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்க செய்வதற்கான
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌’’.

இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதையும் வாசிக்கலாம்:  APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget