மேலும் அறிய

National Education Policy: தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக 16 மாணவர் அமைப்புகள் கூட்டாக போராட்டம்; நாடாளுமன்ற பேரணி அறிவிப்பு

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, 16 மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக போராட்டத்தை அறிவித்துள்ளன.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, 16 மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக போராட்டத்தை அறிவித்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகளின் மாணவர் அமைப்புகள் தற்போது ஒன்றாக இணைந்து, United Students of India என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.

நாட்டில் செயல்பட்டு வரும் 16 மாணவர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இதில் திமுக மாணவர் அணிச் செயலாளரும் எம்எல்ஏவுமான சிவிஎம்பி எழிலரசன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகளுடைய மாணவர் அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக மயூக் பிஸ்வாஸ், அனுராக் நிகாம், பிரசெஞ்சித் குமார் உள்ளிட்ட பிற கட்சிகளின் மாணவரணித் தலைவர்களும் உடன் இருந்தனர்.

‘கல்வியைக் காப்பாற்ற தேசிய கல்விக் கொள்கையை நிராகரியுங்கள்; இந்தியாவைக் காப்பாற்ற, பாஜகவை நிராகரியுங்கள்’ (Save Education, Reject NEP; Save India, Reject BJP) என்ற முழக்கத்துடன் கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்கள் சந்திப்பில் மாணவர் தலைவர்கள் கூறியதாவது:

மாணவர்களை அணிதிரட்டுவோம்

’’எங்களின் அமைப்பில் சுமார் 5 கோடி மாணவர்கள் உள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்ட உள்ளோம். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியதன் மூலம், மாணவர்களின் எதிர்காலத்துடன் பாஜக விளையாடுகிறது.

மிகப்பெரிய பயிற்சி மையங்களுக்கு உதவவே க்யூட் தேர்வு உள்ளிட்ட பொது நுழைவுத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன. தேசிய கல்விக் கொள்கை, கல்வியை வணிகமயமாக்கி, வகுப்புவாதமாக்குகிறது.

கல்வி இல்லையென்றால் ஜனநாயகம் வலுவிழக்கும். ஜனநாயகம் வலுவிழந்தால் நமது சுதந்திரம் வலுவிழக்கும் என்ற காரணத்தால் கல்வி உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தோடு; கல்வியை வணிகமயமாக்கும், காவிமயமாக்கும், அனைவருக்குமான சமவாய்ப்பை மறுக்கும், குலக்கல்வித் திட்டத்திற்கு வழிவகுக்கும், இருமொழிக் கல்வி கொள்கையை இருட்டடிப்பு செய்யும்,சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றைப் பண்பாட்டு தேசமாக அதிலும் குறிப்பாக சமஸ்கிருத பண்பாட்டுத் தேசமாக இந்தியாவை கட்டமைக்க வழிவகுக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நிராகரிப்போம்!

பிப்ரவரி 1-ல் சென்னையில் பேரணி

இந்தியாவை காக்க Save Education, Reject NEP; Save India, Reject BJP என்ற முழக்கத்துடன், டெல்லியில் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணியை (Parliament March) வரும் 2024, ஜனவரி 12 தேதியன்றும், அதே கருத்தை பரப்புரை செய்யும் வகையில் சென்னையில் 2024, பிப்ரவரி 1-ம் தேதியன்றும் மாபெரும் பேரணியை நடத்திடவும் “United Students of India” கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது’’.

இவ்வாறு இந்திய ஐக்கிய மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget