மேலும் அறிய

Naan Mudhalvan UPSC Scheme: நான் முதல்வன் திட்டம்.. யு.பி.எஸ்.சி. ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு -விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் தேர்வின் மூலம் 1000 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வு பற்றிய  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.  https://www.rsanmudhalvan.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

Naan Mudhalvan UPSC Scheme: நான் முதல்வன் திட்டம்.. யு.பி.எஸ்.சி. ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு -விண்ணப்பிப்பது எப்படி?

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வுப் பிரிவு" என்னும் புதிய பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத்‌ திட்டச்‌ செயலாக்கத்‌ துறை, வறுமை ஒழிப்புத்‌ திட்டங்கள்‌ மற்றும்‌ ஊரகக்‌ கடன்கள்‌ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.

தமிழ் நாடு அரசின் UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் மதிப்பீட்டுத் தேர்வு

 தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2023-2024 க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதிப்பீட்டுத் தேர்வு

 UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது.  இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் விதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.rsanmudhalvan.tn.gov.in- என்ற இணையதளத்தில் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, நாளை (02.08.2023 அன்று) முதல் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2023

என்ன அம்சங்கள்?

"நான்‌ முதல்வன்‌" திட்டத்தின்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவின்‌ கீழ்‌, அரசுத் தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence போன்ற பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும்‌ சிறந்த முறையில்‌ பயிற்றுவிக்கும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ இளைஞர்களிடையே துவங்கப்பட்டு உள்ளது. 

அரசுப்பணி ஒன்றையே கனவாகக்‌ கொண்டுள்ள ஆயிரம்‌ ஆயிரம்‌ இளைஞர்களின்‌ கனவை மெய்ப்படுத்துவதே இத்திட்டத்தின்‌ நோக்கம்‌.மத்திய அரசுப்‌ பணி போட்டித் தேர்வுகளில்‌ தமிழர்களின்‌ பங்கேற்பை கணிசமான அளவில்‌ அதிகரித்து வெற்றிபெற செய்வதோடு மட்டுமல்லாமல்‌ கூடிய விரைவில்‌ ஐஐடி, என்‌.ஐ.டி, தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள்‌, அகில இந்திய மருத்துவ நிறுவனம்‌ ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில்‌ ஆயிரக்கணக்கான தமிழ்‌ இளைஞர்கள்‌ பயிலும்‌ வண்ணம்‌ குமரி முதல்‌ இமயம்‌ வரை நம்‌ அறிவை விரிவு செய்ய இத்திட்டம்‌ விசாலப்‌ பாதை வகுக்கும்‌ என்ற நோக்கத்தையும்‌ கொண்டு "நான்‌ முதல்வன்‌" போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க..

Naan Mudhalvan Scheme: படிப்புகள், நுழைவுத்தேர்வு, உதவித்தொகை, கடன்... விவரங்களை அள்ளித்தரும் நான் முதல்வன் திட்டம்; பயன்படுத்துவது எப்படி?- முழு அலசல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
T20 WC 2024: அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Breaking News LIVE: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
T20 WC 2024: அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Watch Video: அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழேவிழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Embed widget