மேலும் அறிய

"எங்களுக்குத் தேவை பணி நிரந்தரம்; சிறப்பு மதிப்பெண் அல்ல!" - கொதிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற முடியாது என்று நேரடியாகச் சொல்லாமல், சாக்குபோக்குச் சொல்வதா?" என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்ற தொனியில் தமிழக முதல்வரின் சமீபத்திய அறிவிப்பு அமைந்துள்ளதாகப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற முடியாது என்று நேரடியாகச் சொல்லாமல், சாக்குபோக்குச் சொல்வதா?" என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதல்வரின் அறிவிப்பும் எழும் விமர்சனமும்

சமீபத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்போது, அதில் தற்போது பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இப்போது தேர்வு நடத்தி அதில் சிறப்பு மதிப்பெண் தருவோம் என்பது அநீதி. 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை, புதிதாக வேலை தேடும் விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து தேர்வு எழுதச் சொல்வது என்ன நியாயம்? இதைவிடப் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று நேரடியாகவே சொல்லி இருக்கலாம்."

15 ஆண்டு கால உழைப்பும் தற்போதைய நிலையும்

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி சட்டசபை விதி 110-ன் கீழ், 16,549 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, 2012 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது இதில்

 * உடற்கல்வி: 3,700 பேர்

 * ஓவியம்: 3,700 பேர்

 * கணினி அறிவியல்: 2,000 பேர்

 * தையல்: 1,700 பேர்

 * இசை, கட்டடக்கலை, தோட்டக்கலை, வாழ்க்கைக்கல்வி: சுமார் 900 பேர்

என மொத்தம் 12,000 பேர் கடந்த 15 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை முறையான பணிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது இவர்களின் நீண்ட கால ஆதங்கம்.

சம்பள உயர்வு போராட்டங்கள் - ஒரு பார்வை

திமுக ஆட்சி அமைத்த போது 10,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிய இவர்களுக்கு, பணி நிரந்தரம் கோரி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே சம்பள உயர்வு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

*2023 போராட்டம்: 2,500 ரூபாய் உயர்வு அறிவிக்கப்பட்டு, 2024-ல் 12,500 ரூபாயாக வழங்கப்பட்டது.

*2026 ஜனவரி 14 அறிவிப்பு: மீண்டும் 2,500 ரூபாய் உயர்வு அறிவிக்கப்பட்டு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

"அரசு சலுகைகள் ஏதுமின்றி, வெறும் 15,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு இன்றைய விலைவாசியில் குடும்பத்தை எப்படிக் கொண்டு செல்வது? அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இதர சலுகைகள் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிட்டல் சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில வழக்கில் வழங்கிய தீர்ப்பை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் சுட்டிக்காட்டினார். அதில், "மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் (Samagra Shiksha) பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் ஏற்கனவே இதே பாடங்களை எடுக்கும் சிறப்பாசிரியர்கள் (Special Teachers) காலமுறை ஊதியத்தில் அடிப்படைச் சம்பளமாக 20,600 ரூபாய் பெறுகின்றனர். ஒரே கல்வித்தகுதி, ஒரே வேலை என இருக்கும்போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம் வழங்குவது உச்ச நீதிமன்றத்தின் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஆணைக்கு எதிரானது என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்பு

12,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

*வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுதல்: பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 * இடைக்கால பட்ஜெட்: வரவிருக்கும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

*சிறப்புச் சட்டம்: 15 ஆண்டு அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, இவர்களை நிரந்தரமாக்கத் தனிக் கொள்கை முடிவு அல்லது சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

முதல்வரின் 'சிறப்பு மதிப்பெண்' அறிவிப்பு தங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகவும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget