தேசிய கல்விக் கொள்கைப்படி மாணவர்கள் சேர்க்கையா..? - அமைச்சர் கோவி.செழியன் என்ன சொன்னார்?
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை சர்வாதிகாரத்தோடு பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி மூலம் கபளீகரம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கைப்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை, மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மயிலாடுதுறை அருகே பரசலூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார்.
மக்களுடன் முதல்வர் முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பரசலூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், பரசலூரில் யூஜிசிக்கு மாணவர்கள் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டதை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கபளீகரம் செய்யும் மத்திய அரசு
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை சர்வாதிகாரத்தோடு பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி மூலம் கபளீகரம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் இதுவரையில் உள்ள நடைமுறையை மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை 2025 என யுஜிசியை கொண்டுவந்தது அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இது அடிப்படை கல்வியை தகர்க்கும் முயற்சி. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு இடைநிற்றலை ஊக்குவிக்கும் நிலை ஏற்படும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் மூலமாக மத்திய அரசுக்கும், யுஜிசிக்கும் அனுப்பியிருந்தோம். அதனைனையொட்டி தற்போது 9 மாநிலங்களில் இதனை எதிர்த்து தீர்மானம் இயற்றியுள்ளனர்.
இமெயில் மூலம் எதிர்ப்பு
இந்நிலையில் மத்திய அரசின் யுஜிசிஐ திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஐந்து தினங்களாக மாணவர்கள் இ-மெயில் மூலமாகவும் செல்போன் மூலமாகவும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை துணைவேந்தர்களாக கல்வியாளர்கள் தான் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்பொழுது துணைவேந்தர்களாக யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து படிப்புக்கும் நுழைவு தேர்வு உண்டு என்கிறார்கள் தற்பொழுது நுழைவு தேர்வு இல்லாத நிலை உள்ளது கலைஞர் காலத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். அப்பொழுது கிராமப்புறங்களைச் சார்ந்த 24 சதவீத மாணவர்கள் தான் பொறியியல் படித்து வந்தார் கலைஞர் நுழைவு தேர்வை ரத்து செய்த பின்னர் தான் 75 சதவீத கிராமப்புற தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தனர்.
என்ன நியாயம் என தெரியவில்லை
எனவே யுஜிசி மீண்டும் அதே நிலையை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. அதனை தான் தமிழக அரசு எதிர்த்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர் ஆனால் மத்திய பாஜக அரசு அதனை செய்தே தீருவோம் என்று முனைப்பு காட்டி வருகிறது. துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கு மூன்று பேர் கொண்ட தேடுதல் கமிட்டி அமைத்து இருந்தோம். அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கமிட்டிகளை ஆளுநர் ரத்து செய்கிறார். மேலும் அந்த கமிட்டியில் யுஜிசியால் தேர்வு செய்யப்படும் நபரும் இருக்க வேண்டும். அவர்கள் இணைந்து தேர்ந்தெடுக்கும் ஒருவரை தான் துணைவேந்தராக கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வந்த நபர்களை ரத்து செய்வாராம். மேலும் நியமிக்கப்பட்ட நியமனம் மற்றும் நியமிக்க சொல்லும் நியமத்தையும் நியமிக்க சொல்வாராம். இது என்ன நியாயம் என தெரியவில்லை.
கவர்னர் ஒரு நியமனம் செய்யலாமா?மக்களால் தேர்ந்தெடுப்பட்ட அரசு கொண்டுவந்த குழுவை இவர் ரத்து செய்வாராம். இதனை கண்டிக்கிறவிதமாக மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தன்னெழுச்சியாக மின்னஞ்சல் மூலமாக மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி வருகின்றனர். 1965 மாணவர்கள் இந்திக்கு எதிராக போராடி இந்தி திணிப்பை எதிர்த்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டு இருமொழி கொள்கை அமல்படுத்தப்பட்டது.
பெரியார் பல்கலைக்கழகம்
அதேபோன்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் செயல் மாணவர்கள் போர்களம் போன்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யுஜிசி திரும்ப பெரும் வரை ஓயமாட்டேன் என தமிழக முதல்வர் சூளுரைத்துள்ளார். முதலமைச்சர் கருத்தை வலியுறுத்தி துணை முதல்வர் கருத்தை வலியுறுத்தி மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் யுஜிசிஐ திரும்பப் பெறு மாநில உரிமையை பறிக்காதே, சர்வாதிகார போக்கை கைவிடு என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். யுஜிசி திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை அதனை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

