மதுரையில் மாணவிக்கு வந்த தவறான மதிப்பெண் பட்டியல் திருத்தி வழங்கப்பட்டது
கணிதம் மட்டும் தோல்வியுற்று மற்ற அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று மொத்தம் 239 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத்தேர்வுகளை தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில் 14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் பங்கேற்று விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் 8-ம் தேதி வெளியான நிலையில், மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 95.84% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 ஆயிரம் ஆண் மாணவர்களும், 17306 பெண் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகே சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(26) என்பவரது மனைவி ஆர்த்தி (19) தேர்வு எழுதி தேர்ச்சி முடிவுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 2021-ல் ஆர்த்தி தனது 17 வயதில் பதினொன்றாம் வகுப்பை திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் முடித்து இருந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக வேல்முருகனை திருமணம் செய்திருந்தார். தொடர்ந்து, குழந்தை திருமணம் செய்து கொண்டதால் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது வரை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தங்களது திருமண வாழ்க்கையினால் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக வேல்முருகன் தனது மனைவி ஆர்த்தியை 2023
இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத முடிவு செய்து, திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் 11-ம் வகுப்பு முடித்த சான்றிதல் காண்பித்து 2022-ல்சேர்த்து பொதுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வாங்கி பொதுதேர்வு நுழைவுச்சீட்டு பெற்று கடந்த 2023 மார்ச் 13ஆம் தேதி திருமங்கலம் சென் பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் எழுதினார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஆர்த்தியும் தனது கணவர் வேல்முருகனுடன் சேர்ந்து ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் மாணவி ஆர்த்திக்கு தமிழில் 138 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 70 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை என முடிவு வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்ததில் தேர்வுக்கு மாணவி விண்ணப்பித்த போது பழைய பாடத்திட்டத்திற்கு பதிவு செய்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருந்ததாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டதன் பேரில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா அந்த பெண்ணுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வழங்கியுள்ளனர். அதில் கணிதம் மட்டும் தோல்வியுற்று மற்ற அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று மொத்தம் 239 மதிப்பெண் பெற்றுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்