மேலும் அறிய

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் மதுரையில்  தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் !

ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக கூடாது; பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோடி அரசு நீட் தேர்வை திணிக்கிறது. - எனவும் குற்றச்சாட்டு.

நீட் தேர்வு தொடர்ந்து மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது
 
நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம்  மதுரை மாநகர் சார்பில் மீனாட்சி பஜார் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் முற்றுகையிட்டு போராட்டம் மாவட்ட தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமையில்  நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சி. டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினர் தீபலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின் கூறியதாவது..," 2017ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வு தொடர்ந்து மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது. மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த தேர்வாக நீட்டை மத்திய அரசு விளம்பரப்படுத்தினாலும், அதில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் கம்மல், செயின் உள்ளிட்ட அனைத்தையும் கழற்றி வைத்து தேர்வு எழுத வேண்டிய அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தும், வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது.
 
திட்டமிட்டு மாணவர்களின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதை காட்டுகிறது.
 
ராஜஸ்தானில் ரூ.30 லட்சத்திற்கு நீட் வினாத்தாள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 16 பேருக்கு ஒரே மதிப்பெண் கிடைத்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் பாஜக நிர்வாகியும் இருப்பது, திட்டமிட்டு மாணவர்களின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதை காட்டுகிறது. இந்தியாவெங்கும் 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். ஒரு மாநிலத்தில் நடந்த முறைகேட்டுக்காக அனைத்து மாணவர்களையும் மீண்டும் தேர்வு எழுத வைப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. இது மாணவர்களின் மனநிலையையும் உடல்நிலையையும் கடுமையாக பாதிக்கும்.
 
மோடி அரசு நீட் தேர்வை திணிக்கிறது.
 
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக கூடாது; பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோடி அரசு நீட் தேர்வை திணிக்கிறது. இதை இந்திய மாணவர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது,” என தெரிவித்தார். மேலும், நீட் தேர்வை ரத்து செய்து மாநிலங்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தனர். முன்னதாக சேதுபதி பள்ளி அருகில் இருந்து ஒன்றிய அரசின் நீட் தேர்வு கொள்கைக்கு எதிராக மற்றும் முறைகேடு கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிம்மக்கல் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget