மேலும் அறிய

மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட நீட் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து சென்டாக் (CENTAC) நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி:  புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட நீட் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வரும் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து சென்டாக் (CENTAC) நிர்வாகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பப் பதிவு பின்னணி:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேதம்) மற்றும் பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவம்) ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கைக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான அவகாசம் ஆகஸ்ட் 6-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல்கள்:

சான்றிதழ்கள் புதுப்பித்தல்: புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் இன்னும் கிடைக்காத மாணவர்கள், தங்களது பழைய சான்றிதழ்களை இணைத்து ஆகஸ்ட் 8 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆனால், இறுதித் தரவரிசைப் பட்டியல் (Final Merit List) வெளியாவதற்குள் புதிய சான்றிதழ்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

திருத்தங்கள் செய்ய வழிமுறை: ஏற்கனவே விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவர்களுக்குத் தரவுகளை மாற்றும் எடிட் (Edit) வசதி நிறுத்தப்பட்டுள்ளது. விவரங்களை திருத்த விரும்புவோர் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கூடாது. சான்றிதழ்கள் பதிவேற்றவோ அல்லது திருத்தங்கள் செய்யவோ தங்களது 'Login Dashboard'-ல் உள்ள 'Grievance' வசதியைப் பயன்படுத்தி கோரிக்கை அனுப்ப வேண்டும்.

5,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்:

மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை மொத்தம் 6,575 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 5,518 பேர் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு & பிராந்திய ரீதியிலான விவரங்கள்:

ஒதுக்கீட்டு வாரியாக: அரசு ஒதுக்கீட்டில் 1,122, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 552, நிர்வாக ஒதுக்கீட்டில் 3,760 மற்றும் என்.ஆர்.ஐ (NRI) ஒதுக்கீட்டில் 61 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பிராந்திய வாரியாக: புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 1,674 மாணவர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த 3,760 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். தவிர, என்.ஆர்.ஐ பிரிவில் 61, ஓ.சி.ஐ (OCI) பிரிவில் 23 மற்றும் என்.ஆர்.ஐ ஸ்பான்சர் பிரிவில் 296 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

சிறப்புப் பிரிவு: அரசுப் பள்ளி மாணவர்கள் (61), சிறந்த விளையாட்டு வீரர்கள் (53), தியாகிகளின் வாரிசுகள் (33), முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் (13), மாற்றுத்திறனாளிகள் (2) மற்றும் தெலுங்கு மொழி சிறுபான்மையினர் (34) எனப் பல்வேறு பிரிவுகளின் கீழும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

உதவி எண்கள்:

சந்தேகங்கள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு மாணவர்கள் 0413-2655570 அல்லது 0413-2655571 ஆகிய உதவி எண்களையோ, அல்லது இணையதளத்தில் உள்ள 'Grievance' பகுதியையோ தொடர்புகொள்ளலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
குப்பை புகாரா? இனி ஒரு 'மெசேஜ்' போதும்! - புதுச்சேரி அரசின் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!
குப்பை புகாரா? இனி ஒரு 'மெசேஜ்' போதும்! - புதுச்சேரி அரசின் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget