மேலும் அறிய

Temporary Teachers : எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளை விட குறைந்த ஊதியமா?- ராமதாஸ் கேள்வி

எல்கேஜி, யூகேஜி  மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு தினக்கூலிப் பணியாளர்களை விட குறைந்த ஊதியமா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

எல்கேஜி, யூகேஜி  மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு தினக்கூலிப் பணியாளர்களை விட குறைந்த ஊதியமா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் 2,381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்காக மாதம் ரூ.5,000 ஊதியத்தில் பள்ளிக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மழலையர் வகுப்புகளுக்கு  சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு மழலையர் பள்ளிகளாக மாற்றப்பட்டன. அதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த நிலையில், மழலையர் வகுப்புகள் மூடப்படும் என்று நடப்புக் கல்வியாண்டின்  தொடக்கத்தில் அரசு அறிவித்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் கடும் எதிர்ப்பால், அந்த முடிவை  தமிழக அரசு திரும்பப் பெற்றது. 

அதன்பின் 3 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இப்போது ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தற்காலிக ஆசிரியர்களை பள்ளி நிர்வாகமே நியமிக்க அரசு அனுமதித்துள்ளது. அவர்கள் இல்லம் தேடிக் கல்வி திட்ட பணியாளர்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்; 11 மாதங்களுக்கு மட்டும் தலா ரூ.5 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருக்கிறது.

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் ஏன்?

தமிழக அரசின் இந்த அறிவிப்பு சமுகநீதி அடிப்படையிலும், மனிதநேய அடைப்படையிலும் பெரும் தவறு ஆகும். முதலில் மழலையர் வகுப்புகளுக்கான ஆசிரியர்களாக இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை நியமிப்பது பொருத்தமற்றது. 2018-ஆம் ஆண்டில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்ட போது, அவை மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அரசின் அறிவிப்பை அரசே மதிக்காமல் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை நியமிப்பது விதிமீறல் ஆகும். இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களால் மழலையர் வகுப்புகளைத் திறம்பட நடத்த முடியாது.

இரண்டாவதாக எல்.கே.ஜி., யு.கே.ஜி ஆகிய இரு வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியரை நியமிப்பது போதுமானதல்ல. இரு வகுப்புகளுக்கும் தனித்தனி பாடங்களை நடத்த வேண்டியிருக்கும் நிலையில், ஒரே ஆசிரியரை நியமித்தால் அவர்களால் இரு வகுப்புகளை ஒரே நேரத்தில் கையாள முடியாது. இரு வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியரை நியமிப்பது, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கமே சீரழிந்து விடும்.

Temporary Teachers : எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளை விட குறைந்த ஊதியமா?- ராமதாஸ் கேள்வி

ஆசிரியர் பணி என்பது அறப்பணி

மூன்றாவது மழலையர் வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு ரூ.5,000 மட்டும் மாத ஊதியமாக வழங்கப் படுவதை ஏற்கவே முடியாது. ஆசிரியர் பணி என்பது அறப்பணியாகும். அதற்கான மரியாதை ஊதியத்திலும் காட்டப்பட வேண்டும். தமிழக அரசு பணிக்காக அழைக்கப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.536 வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணிக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.281 வழங்கப்படுகிறது. ஆனால், மழலையர்களை சமாளித்து கல்வி வழங்கும் ஆசிரியர் பணிக்கு தினக்கூலியை விட மிகவும் குறைவாக ஒரு நாளைக்கு ரூ.166 மட்டுமே ஊதியமாக  நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதை விட மோசமான உழைப்புச் சுரண்டல் வேறு எதுவும் இருக்க முடியாது,

சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்கள் கூடாது; அனைத்து பணிகளும் இட ஒதுக்கீட்டின்படிதான் நிரப்பப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மழலையர் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் 11 மாதத்திற்கு மட்டுமே தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்; அதுமட்டுமின்றி இந்த நியமனங்களுக்கு இட ஒதுக்கீடும் இல்லை.

தற்காலிக பணி நியமனங்கள்தான் சமூகநீதிக்கு பெருங்கேடு ஆகும். தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அரசு - பொதுத்துறை நிறுவனங்களின் தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு லட்சம் இருக்கக்கூடும். இந்த ஒரு லட்சம் பணி நியமனங்களிலும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை என்பதுதான் மிக மோசமான சமூகஅநீதி ஆகும். மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் நியமனத்திலும் இந்த சமூக அநீதி தொடர அனுமதிக்கக்கூடாது.

வலிமையான கல்விக்கு அடித்தளம்

மழலையர் வகுப்புகளை நடத்துவதை அரசு தேவையற்ற சுமையாக கருதக் கூடாது. மழலையர்  வகுப்புகள்தான் வலிமையான கல்விக்கு அடித்தளம் ஆகும். மழலையர் வகுப்புகளை மூடி விட்டால் கடுமையான எதிர்ப்பு எழும்; அதனால் பெயரளவுக்கு மழலையர் வகுப்புகளை நடத்தி விடலாம் என்ற  நிலைக்கு தமிழக அரசு வந்து விடக் கூடாது.

மழலையர் வகுப்புகளின் முக்கியத்துவத்தை கருத்தில்  கொண்டு மழலையர் வகுப்புகளுக்கு தகுதியும், திறமையும் கொண்ட மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் வீதம் 2,381 பள்ளிகளுக்கும் 5143 மாண்டிசோரி ஆசிரியர்களை இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி, நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
Embed widget