‛இனி கல்லூரிக்கு செல்வது கட்டாயம்... வாரத்திற்கு 6 நாள் நேரடி வகுப்பு: உயர்கல்வித் துறை அறிவிப்பு!
ஒருநாள் விட்டு ஒருநாள் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் திருத்தம் செய்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. உயர்கல்வித்துறையின் உத்தரவை அனைத்து கல்லூரிகளும் முறையாக பின்பற்றுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. TN College Exam: கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வி துறை
ஒருநாள் விட்டு ஒருநாள் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் திருத்தம் செய்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
#BREAKING | பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இனி வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் - உயர்கல்வித்துறை https://t.co/wupaoCQKa2 | #TNColleges | #OnlineExam | #Colleges pic.twitter.com/tVVQ7v3lF4
— ABP Nadu (@abpnadu) November 22, 2021
முன்னதாக, தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வு தான் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது
அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே நடைபெறும் என்றும், கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது என்று உயர்கல்வி துறை அறிவித்தது. ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராடி வந்த நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் உயர்கல்வித்துறை திட்டவட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது. TN TRB Exam | அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி.. தேர்வு அறிவிப்பு விவரங்கள் இங்கே..
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்