மேலும் அறிய
Advertisement
நீட் தேர்வு எழுதினாலும் பிரச்சினை தானா...? எழுதியது 177 வினா... வந்தது வெறும் 5! கதறும் காஞ்சி மாணவர்!
நீட் தேர்வில் 177 வினாக்களுக்கு விடை எழுதிய மாணவருக்கு, வெறும் ஐந்து கேள்விகளுக்கு மட்டுமே விடை எழுதியதாக ஓஎம்ஆர் ஷீட் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் நாடு முழுக்க இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் மாநிலத்திலும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தன இருந்தும் தொடர்ந்து நீட் தேர்வு நடைபெற்று. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுசில்குமார். இவருடைய மகன் ஆயுஸ் வயது 18. இவர் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு எழுதியுள்ளார். இதற்காக ஒரு வருடத்திற்கு மேலாக பயிற்சி வகுப்புகளுக்கு, சென்று இரவு தூங்காமல் கண் விழித்து படித்து பயிற்சி பெற்று 180 கேள்விகளில் 177 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.எம்.ஆர் ஷீட் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓ.எம்.ஆர் சீட்டை பார்த்தபோது வெறும் ஐந்து கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துள்ளதாக இருந்ததால் ஆயுஸ் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஆயூசின் தந்தை சுசில்குமார் நீட் தேர்வு நடத்துகிற என்.டி.ஏ நிறுவனம், பிரதமர் அலுவலகத்திற்கு, ஆன்லைன் மூலம் புகார் அளித்தும் பதில் வராமல் இருந்துள்ளது. எந்தவித பதிலும் வராததால், ஓ.எம்.ஆர் சீட்டில் நடைபெற்ற தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக, ஆன்லைன் மூலம் ஒரு கேள்விக்கு 200 ரூபாய் வீதம் 177 கேள்விகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஆயுஸ் எழுதிய விடையை சரிபார்க்க விண்ணப்பித்தும் இதுவரை பதில் வரவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் கூறுகையில், நான் 177 கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தேன். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஓஎம்ஆர் ஷீட் இல், ஐந்து கேள்விகள் மட்டுமே பதில் அளித்ததாக பதிவாகியுள்ளது. தனித்தனியாக ஒரு கேள்விக்கு, 200 ரூபாய் என சுமார் முப்பத்தி ஐந்து ரூபாய் வரை தேசிய தேர்வு முகமைக்கு கட்டியுள்ளேன் .ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என தெரிவித்தார்.
இன்னும் சில தினங்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், என்ன செய்வது என்று மனக்குழப்பத்தில் மாணவன் ஆயுஸ் மற்றும் குடும்பமே மிகவும் வருத்தத்துடனும் வேதனையிலும் உள்ளனர். ஏற்கனவே, நீட் தேர்வுகளால் தமிழகத்தில் பல மாணவர்கள் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், தற்போது இதுபோன்ற குளறுபடிகளால் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற மத்திய அரசு வழி வகுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion