மேலும் அறிய

JEE NEET Merge: இனி ஒரே நுழைவுத்தேர்வு.. ஜேஇஇ, நீட் தேர்வுகள் இணைப்பு? மத்திய அரசு அதிரடி திட்டம்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், தேர்வு நடைமுறைகளில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் இந்த அதிரடி முடிவு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு மத்தியில் ஜே.. மற்றும் நீட் தேர்வுகளை ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ (JEE) ஆகிய இரண்டு முக்கிய நுழைவுத் தேர்வுகளை ஒன்றிணைத்து, இனி ஒரே பொது நுழைவுத் தேர்வாக நடத்த மத்திய அரசு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த நீட் இளநிலைத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்தே, தேர்வு நடைமுறைகளில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் இந்த அதிரடி முடிவு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வுகளில், அண்மைக் காலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தின.

நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம்

இது தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்களும், நீதிமன்ற வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தேசிய தேர்வு முகமையின் நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

இதற்கு நிரந்தரத் தீர்வாக, தனித்தனியாக நடத்தப்படும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை இனி ஒருங்கிணைத்து, ஒரே பொதுவான மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வாக (Joint Medical and Engineering Entrance Exam) நடத்தும் திட்டத்தை மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருகிறது.

இந்த மாற்றத்தின் மூலம் பல தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதில் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்கள் தவிர்க்கப்படும். மேலும், தேர்வுகளை மிகவும் பாதுகாப்பாகவும், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராத வகையிலும் நடத்துவது எளிதாகும் என அரசு கருதுகிறது.

உயர்மட்டக் குழு அமைப்பு

தேர்வு நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்தும், தேசியத் தேர்வுகள் முகமையின் செயல்பாடுகளைச் சீரமைப்பது குறித்தும் ஆராய மத்தியக் கல்வி அமைச்சகம் ஏற்கனவே ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் விரிவான ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் இந்த புதிய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு முறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

என்னென்ன முன்னெடுப்புகள்?

வினாத்தாள் கசிவுக்கான வாய்ப்புகளைக் குறைத்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், வினாத்தாள் தயாரிக்கும் பணிகளில் வெளியாட்களின் தலையீட்டைக் குறைக்க தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மூன்றாம் தரப்பு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, தனக்கென சொந்தமாக பிரத்யேக தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளைப் படிப்படியாக என்டிஏ உருவாக்க உள்ளது.

முன்னதாக நீட் இளநிலை 2026 தேர்வு மே 3ஆம் தேதியன்று இந்தியாவில் 5,500-க்கும் மேற்பட்ட மையங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் நடைபெற்றது. இதில் முறைகேடுகள் நடந்ததாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளால்  தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிவுக்குக் காரணமான கும்பல் குறித்தும், தேர்வு நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியாவின் கல்வி முறையில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget