JEE Advanced Result 2023: ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு - எங்கு, எப்படி அறியலாம்.. விவரங்கள் இதோ..
நாடு முழுவதும் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்வி பயில்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்வி பயில்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் காலை 10 மணிக்கு மேல் jeeadv.ac.in என்ற தேர்வு இணையதளத்தில் மதிப்பெண்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி விடைத்தாள் விவரங்களும் வெளியாகியுள்ளது.
முதலிடம் யாருக்கு?
தேசிய அளவிலான இந்த நுழைவுத்தேர்வில் ஐஐடி ஐதராபாத் மண்டலத்தை சேர்ந்த வவிலலா சித்விலாஸ் ரெட்டி என்பவர், 341 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதே ஐதராபாத் மண்டலத்தை சேர்ந்த நாக பவ்யா ஸ்ரீ, 298 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி எனும் பெருமையை பெற்றார்.
மதிப்பெண் விவரம்:
ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 தேர்வு 360 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அந்த மொத்த மதிப்பெண்களில், இயற்பியல் பாடத்திற்கு 120 மதிப்பெண்கள் (தாள் 1ல் 60, தாள் 2ல் 60), வேதியியல் பாடத்திற்கு 120 மதிப்பெண்கள் (தாள் 1ல் 60, தாள் 2ல் 60), கணித பாடத்திற்கு 120 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது (தாள் 1ல் 60, தாள் 2ல் 60).
தேர்வு விவரம்:
JEE Advanced 2023 தேர்வு கடந்த ஜூன் 4ம் தேதி இரண்டு வேளையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 11ம் தேதி இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியானது. இந்த ஆண்டுக்கான முதல்கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 24, 25, 29, 30, 31-ம் தேதிகளில் நடந்தது. இதேபோல, கடந்த ஜன.28-ம் தேதி பி.ஆர்க்., பி.பிளானிங். (தாள்-2ஏ, 2பி) போன்ற படிப்புகளுக்கான தேர்வும், கடந்த பிப்.1-ம் தேதி பி.இ., பி.டெக். (தாள்-1) படிப்புகளுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
8.24 லட்சம் பேர் தேர்வெழுதினர்:
இத்தேர்வுகளை எழுத 6.03 லட்சம் மாணவர்கள், 2.56 லட்சம் மாணவிகள், 3 திருநங்கைகள் என மொத்தம் 8.60 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இந்தியாவில் 290 நகரங்கள், வெளிநாடுகளில் 18 நகரங்களில் நடந்த இத்தேர்வை 8.24 லட்சம் பேர் எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டு தேர்வுகளையும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 372 பேர் எழுத, 43 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முடிவுகளை காண்பது எப்படி?
STEP 1 :JEE Advanced 2023 இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : முகப்பு பக்கத்தில் காணப்படும் JEE (Advanced) 2023 Results என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
STEP 3 : தற்போது உங்களது லாகின் விவரங்களை சரியாக உள்ளீடு செய்யவும்.
STEP 4 : பின் வெளியாகும் தேர்வு முடிவை பிரிண்ட் கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை காண்பதற்கான இணைப்புகள்:
Direct link to check result: https://result23.jeeadv.ac.in/
Final answer key of Paper 1: https://jeeadv.ac.in/documents/Paper1_Final_Answer_Keys.pdf
Final answer key of Paper 2: https://jeeadv.ac.in/documents/Paper2_Final_Answer_Keys.pdf
தேவயான விவரங்கள்:
ஜேஇஇ அட்வான்ஸ்டு முடிவு 2023: 2023 ஆம் ஆண்டு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், முடிவைச் சரிபார்க்க கீழே உள்ள விவரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்
-பதிவு எண்
-பிறந்த தேதி
ஒதுக்கீடு எப்படி?
ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளின் அடிப்படையில் IIT-கள், NIT-கள், IIIT-கள் மற்றும் பிற அரசு நடத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள இடங்கள், கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தால் (JoSAA) பொதுவான செயல்முறையின் அடிப்படையில் ஒதுக்கப்படும். நடப்பாண்டில் இந்த செயல்முறை ஆன்லைன் முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.