ISC ICSE Result 2024: வெளியானது ஐ.சி.எஸ்.இ.,10th, ஐ.எஸ்.சி. +2 தேர்வு முடிவுகள்! தேர்ச்சி விழுக்காடு என்ன?
ISC ICSE Result 2024: ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகளை காண்பது எப்படி பற்றிய விவரங்களை காணலாம்.
![ISC ICSE Result 2024: வெளியானது ஐ.சி.எஸ்.இ.,10th, ஐ.எஸ்.சி. +2 தேர்வு முடிவுகள்! தேர்ச்சி விழுக்காடு என்ன? ISC ICSE Result 2024 Highlights: CISCE 10th, 12th Result Declared On cisce.org Check Your Result Here ISC ICSE Result 2024: வெளியானது ஐ.சி.எஸ்.இ.,10th, ஐ.எஸ்.சி. +2 தேர்வு முடிவுகள்! தேர்ச்சி விழுக்காடு என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/eb79b37e5916736d3e7b5924bf16bc0d1714991785827333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
CISCE ISC 12th, ICSE 10th Result 2024: ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, ஐ.எஸ்.சி. +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (The Council for the Indian School Certificate Examinations) வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் இந்தாண்டு 99.47 சதவீதம் மாணவர்கள், ஐ.சி.எஸ்.சி. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பில் 98.15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி,21 முதல் மார்ச்,28-ம் வரை, ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவர் 12-ம் தேதி முதல் ஏப்ரல்,2 ம் தேதி வரை நடைபெற்றது. ISC +2 தேர்வை 99,901 மாணாவர்கள் எழுதினர். 98.19 தேர்ச்சி விழுக்காடாக உள்ளது.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
பெண்கள்-47.18%
ஆண்கள் -52.82%
ஐ.சி.எஸ்.இ. +2 தேர்வுகளை 2 லட்சத்து 43 ஆயிரத்து 617 பேர் எழுதினர். இதில் 53.57% ஆண்களும் 46.43% பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கர்நாடகா, உத்தரப் பிரதேச மாநிலங்கள் இந்த முறை தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் விடைத்தாள் நகல் / மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள்களை செக் செய்ய விண்ணப்பிக்க ரூ.1000 செலுத்த வேண்டும்.
மறுக்கூட்டல் செய்ய வேண்டுமெனில் ரூ.1,500 செலுத்த வேண்டும்.
https://careers.cisce.org/eCareersPublicClient/Web - என்ற இணைப்பை க்ளிக் செய்து மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
அதில், நீங்கள் விடைத்தாள் நகல் / மறுகூட்டல் செய்ய வேண்டிய பாடத்தினை தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை:
(cisce.org / results.cisce.org )
https://resultsda89975eb26c6e4086d2c93f302788b8.trafficmanager.net/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை காணலாம்.
அதில், UID, INDEX NO. வழங்கி கேப்சா (CAPTCHA) பதிவிட்டு தேர்வு முடிவுகளை காணலாம்.
இதன் Improvement Exams வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் compartment தேர்வு கிடையாது என்று தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)