மேலும் அறிய

ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்களை சேர்ப்பதா சாதனை? கொண்டாட எதுவும்  இல்லை- அன்புமணி வேதனை

ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்களை சேர்ப்பதா சாதனை? அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி.

நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க திமுக அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், மாணவர் சேர்க்கைத் தொடங்கி 58 நாள்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்திருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
’’தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைத் தொடங்கி இரு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதை வரலாற்றுச் சாதனை என  திமுக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பில் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கும் நிலையில் இதை சாதனை என்று கூறுவது ஏமாற்றும் செயலாகும்.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் 31,336 பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் 6,218 பள்ளிகள் என மொத்தம் 37,554 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026- 27ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1ஆம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 27ஆம் நாள் திங்கள் கிழமை வரை தொடக்கக் கல்வித்துறையின்  கீழ்  செயல்படும் 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 97,737 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் 6,796 குழந்தைகளும், இரண்டு முதல் எட்டு வரையிலான வகுப்புகளில் 8,176 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 12,711 மாணவர்கள்  புதிதாக சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் கொண்டாடுவதற்கு எதுவும்  இல்லை.

2025- 26ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்களை புதிதாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மே மாத இறுதி வரை 1.79 லட்சம் மாணவர்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க திமுக அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், மாணவர் சேர்க்கைத் தொடங்கி 58 நாள்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்திருக்கின்றனர். கடந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 54 நாள்களில், அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி வரை 1.50 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்திருந்தார்கள். ஆனால், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.

எந்த ஒரு ஆண்டிலும் முதலாம் வகுப்பில்தான் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்வார்கள். அந்த வகையில் நடப்பாண்டில் 31,336 பள்ளிகளில் 97,737 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். இதிலும் கூட ஒரு பள்ளியில் 6 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றால், இன்னொரு பள்ளியில் ஒரே ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று பொருள். ஒட்டுமொத்தமாக சில ஆயிரம் பள்ளிகளிலாவது ஒரு மாணவர் கூட இதுவரை சேராமல் இருந்திருக்கலாம். அது குறித்த விவரங்களை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கிறது.
 
திட்டமிட்டு சீரழிப்பு

ஒரு காலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் இரு பிரிவுகளும், அதிகபட்சமாக 4 பிரிவுகளும் இருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 40 முதல் 50 மாணவர்கள் என ஒரே பள்ளியில் முதலாம் வகுப்பில் மட்டுமே 160 முதல் 200 மாணவர்கள் சேர்க்கப்பட்ட வரலாறு உண்டு. சில ஊர்களிலும் அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர முன்வந்ததால்,  அருகில் உள்ள கிராமங்களில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட்ட வரலாறும் உண்டு. அவை அனைத்தும் அரசு பள்ளிகள் வரலாற்றில் பொற்காலங்கள். ஆனால், இப்போது ஒரு பள்ளியில் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேரும் அளவுக்கு அரசு பள்ளிகளும், உதவி பெறும் பள்ளிகளும் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் 31, 336 பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 25.50 லட்சம் மட்டும்தான். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 81 பேர் மட்டுமே பயில்கின்றனர். அதே நேரத்தில் 4498 தனியார் பள்ளிகளில் 30.60 லட்சம் மாணவர்கள், அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 680 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக விளக்குகின்றன.
 
அரசின் தோல்வியே தவிர பெற்றோரின் தவறு அல்ல

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனநிலையை  குறை கூற முடியாது. அரசு பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெற்றோர் அனைவரும் தங்களின் பிள்ளைகளை அவற்றில் சேர்க்கவே விரும்புவர். ஆனால், அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெற்றோர் கடன் வாங்கியாவது தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கத் துடிப்பதற்கு காரணம். இது அரசின் தோல்வியே தவிர பெற்றோரின் தவறு அல்ல.

தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 3000 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.28 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் சராசரியாக 3 அல்லது 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை. இத்தகைய அவலச் சூழலில் அரசு பள்ளிகளால் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமானால், அது அரசு பள்ளிகளால் மட்டுமே சாத்தியமாகும். அனைவராலும் தனியார் பள்ளிகளில் லட்சங்களைக் கொட்டி குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. எனவே, அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு வரமாகக் கிடைத்த அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும். அதற்கான அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்,  போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல், இவற்றுக்காக பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்படும்  நிதியை அதிகரித்தல் உள்ளிட்டவை அடங்கிய சிறப்புத் திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்’’. 
 
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
Arun IPS : ’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
School Reopening: பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
CM Vijay: குற்றங்கள் நடக்க கூடாது, வேகமான விசாரணை, கடும் தண்டனை - காவல்துறைக்கு CM விஜய் உத்தரவு
CM Vijay: குற்றங்கள் நடக்க கூடாது, வேகமான விசாரணை, கடும் தண்டனை - காவல்துறைக்கு CM விஜய் உத்தரவு
Maruti Suzuki Victoris: மாருதியின் பாதுகாப்பான கார்..! 26KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், குடும்பங்களுக்கான பட்ஜெட்
மாருதியின் பாதுகாப்பான கார்..! 26KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், குடும்பங்களுக்கான பட்ஜெட்
நீங்க இருங்க முதல்வரே.. நாங்க பேசிக்குறோம்.. திமுகவை எதிர்க்கும் காங்கிரஸ்.. சரமாரி பதிலடி!
நீங்க இருங்க முதல்வரே.. நாங்க பேசிக்குறோம்.. திமுகவை எதிர்க்கும் காங்கிரஸ்.. சரமாரி பதிலடி!
Affordable Hybrid Cars: Hybrid இனி காஸ்ட்லி இல்ல.! Fronx முதல் Hyundai Bayon வரை; விரைவில் வரும் மலிவான ஹைப்ரிட் SUVs
Hybrid இனி காஸ்ட்லி இல்ல.! Fronx முதல் Hyundai Bayon வரை; விரைவில் வரும் மலிவான ஹைப்ரிட் SUVs
Gold Silver Rate May 25th: வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
Embed widget