மேலும் அறிய

மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !

“2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று மத்திய அரசு உறுதியளித்தது. - குறிப்பிடதக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய வளமாக உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பேரணியின் முக்கிய நோக்கம்” என்றும் செல்வா கூறினார்.

காக்ரோச் (Cockroach) பேரணி

வேலையின்மை, போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள், பெட்ரோல்–டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்த்து, “காக்ரோச்” (Cockroach) என்ற பெயரில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இயக்கத்தின் பேரணி மதுரையில் நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வா, “இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சமீபத்தில் இளைஞர்கள் கருப்பான் பூச்சி மற்றும் ஒட்டுண்ணி போல தொந்தரவு செய்கிறார்கள் என கருத்து தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வேலையின்மை மற்றும் வாழ்வாதார சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் தங்களை ‘கருப்பான் பூச்சி’ என அடையாளப்படுத்திக் கொண்டு நாடு முழுவதும் ஒன்றிணைந்து வருகின்றனர்” என்றார்.

இது இளைஞர்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாக பார்க்கப்பட வேண்டும்.

மேலும், இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை தொடங்கிய நபரை கைது செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டிய அவர், “இது இளைஞர்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாக பார்க்கப்பட வேண்டும். ஆனால், அதை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது” என தெரிவித்தார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் போன்றவை இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். “நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை எட்டாக்கனியாக்கியுள்ளது. அதனுடன் வினாத்தாள் கசிவும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.

ரூ.105 ஆக உயர்ந்த பிறகும் அதே தொகைதான் வழங்கப்படுகிறது

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் டெலிவரி தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செல்வா குறிப்பிட்டார். “ஜொமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.15 மட்டுமே வழங்கப்படுகிறது. பெட்ரோல் விலை ரூ.85 இருந்தபோதும் அதே தொகைதான் வழங்கப்பட்டது; தற்போது ரூ.105 ஆக உயர்ந்த பிறகும் அதே தொகைதான் வழங்கப்படுகிறது” என்றார்.

காந்தி அருங்காட்சியகத்திலிருந்து தமுக்கம் மைதானம் வரை நடைபெற்றது

இந்த பேரணி, மதுரையில் உள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திலிருந்து தமுக்கம் மைதானம் வரை நடைபெற்றது. “ஊழலை எதிர்த்தும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். மேலும், “2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய வளமாக உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பேரணியின் முக்கிய நோக்கம்” என்றும் செல்வா கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Embed widget