மேலும் அறிய

Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?

’21வயதில் IPS தேர்வாகி, இன்று பல பெண்கள் UPSC தேர்வு எழுத முன் மாதிரியாக இருப்பவர் ரம்யா பாரதி. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சித்தவருக்கு ஒரு சிரிப்பு சிக்கலை தந்திருக்கிறது'

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது சக காவல்துறை அதிகாரிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார் மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி என்ற விமர்சனங்கள் எழுந்து, அவருக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. முக்கியமான அதுவும் சென்சிட்டிவான வழக்கு தொடர்பான இடத்தில் இப்படி வாய்விட்டு சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தது சரியான நடவடிக்கை இல்லையென்றாலும், இந்த வழக்கில் மிகத் தீவிரமாக செயல்பட்டு, 10 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறார் அதே ரம்யா பாரதி ஐ.பி.எஸ்.

மிக விரைவாக குற்றவாளிகளை கைது செய்ததற்கு பாராட்டு பத்திரம் வாங்கியிருக்க வேண்டிய ரம்யா பாரதி ஐபிஎஸ், ஒரே ஒரு செய்கையால் இன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

அதுவும் செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்னர் தனிப்பட்ட முறையில் காவல் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் ரெக்கார்ட் செய்யப்பட்டதன் விளைவே இப்படியான ஒரு நிலைக்கு ரம்யா பாரதி தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த வழக்கில் மிகத் தீவிரமாக செயல்பட்டு, குற்றவாளியை கைது செய்ய மெனக்கிட்டவர் ரம்யா பாரதி. இவரின் இந்த தீவிரத்தால்தான் குற்றவாளிகளை சில மணி நேரங்களிலேயே பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

யார் இந்த ரம்யா பாரதி ஐபிஎஸ் ?

2008ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜை சேர்ந்த ரம்யா பாரதி, தன்னுடைய 21வது வயதிலேயே UPSC என்ற மத்திய தேர்வாணயத்தின் தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்று ஐபிஎஸ் என்ற போலீஸ் பணியை தேர்வு செய்தவர். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை இளங்கலை சமூகவியல் துறையை தேர்வு செய்து படித்தவர் இவர். கல்லூரி படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலில் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் அளவுக்கு கூட தொடர்ந்து படித்தவர் ரம்யா பாரதி. அதன் விளைவாக தன்னுடைய முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று தன்னுடைய 21வயது வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியிலேயே படித்து வெற்றி பெற்றவர் ரம்யா பாரதி என்பதுதான். இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுத நினைக்கும் ஏராளமான பெண்களுக்கு முன் மாதிரியாகவும் அதே நேரத்தில் பலருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிப்பவருமான ரம்யா பாரதி இருக்கிறார்.

சமூகம் மீதான  அக்கறை

20, 21 வயதில் மற்ற பெண்கள் மாதிரி மகிழ்ச்சியாக இருப்பதை விடுத்தும், தனக்கு பிடித்த பல விஷயங்களை விட்டுக்கொடுத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வெற்றி பெற்றவர் ரம்யா. அதற்கு காரணம். தன்னுடைய தந்தை, தாய் போலவே அரசு பதவியில் அமர்ந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் என்று ரம்யா பாரதியே சொல்லியிருக்கிறார்.

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

ஐபிஎஸ் தேர்வாகி தமிழ்நாட்டு கேடராகவே போஸ்டிங் கிடைத்ததும் ஒரு பெண்ணாக அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழி, பெண்களின் குழந்தைகளின் பாதுகாப்பை தன்னால் முடிந்த அளவு உறுதிசெய்வதுதான். தொடக்கத்தில் அவர் பணியாற்றிய ஓசூர், கோவை மாவட்டங்களில் எல்லாம் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை காவல்நிலையம் வந்து சொல்ல தயங்கிய நிலையில் அவர்களது இடத்திற்கே சென்று விசாரித்து அவர்களுக்கான நீதியை பெற்றுத் தந்தவர் ரம்யா பாரதி.

வட சென்னையின் இணை ஆணையராக ரம்யா

வட சென்னை என்றாலே அதிக குற்றங்கள் நடைபெறும் இடம், குற்றவாளிகளின் புகழிடமாக திகழும் நகரம் என்ற கற்பிதங்களையெல்லாம் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ரம்யா பாரதி. வட சென்னையின் இணை ஆணையராக அவர் பொறுப்பேற்றதும் இரவில் சைக்கிள் எடுத்துக்கொண்டு தெரு, தெருவாக, ரோட், ரோடாக சென்று பாதுகாப்பை உறுதி செய்தார். ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியாக அவர் இரவில் தனியாக ரோந்து சென்றது, வட சென்னையை சேர்ந்த பல பெண்களுக்கு தங்களுடைய பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை பெற வைத்தது. அதே நேரத்தில் வட சென்னை குறித்த பார்வையும் பொதுமக்கள் மத்தியில் மாறத் தொடங்கியது.

மேற்கு மண்டல் ஐ.ஜியாக ரம்யா பாரதி

பின்னர் அவர் மேற்கு மண்டல ஐ.ஜியாக பணியமர்த்தப்பட்டது முதல் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக, நேரடியாக ஐ.ஜி அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு பிரச்னைகளை தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக கோவை மண்டலத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து வாரம்ந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

சிரித்தால் சிக்கல் ?

இந்நிலையில்தான், சூலூர் சிறுமி வழக்கிலும் துரிதமாக செயல்பட்டு, போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கி 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட கோவை மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியே காரணமாக இருந்தார். ஆனால், செய்தியாளர்கள் யாரும் இல்லாதபோது, லைவ் ரெக்கார்ட் ஆன் செய்யப்பட்ட கேமரா முன்னாள், தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுடன் அவர் சிரித்துக்கொண்டு பேசியது அவருக்கு எதிராக மாறியிருக்கிறது.

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget