மேலும் அறிய

Maruti Suzuki Victoris: மாருதியின் பாதுகாப்பான கார்..! 26KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், குடும்பங்களுக்கான பட்ஜெட்

Maruti Suzuki Victoris CNG: மாருதி சுசூகியின் விக்டோரிஸ் கார் மாடலின் சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கி ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Maruti Suzuki Victoris CNG: விக்டோரிஸ் பெட்ரோல் எடிஷன் கிலோ மீட்டருக்கு 4 ரூபாய் வரை செலவழிக்கும் நிலையில், சிஎன்ஜி எடிஷன் மிகப்பெரிய நிதி சேமிப்பை வழங்குகிறது.

மாருதி சுசூகி விக்டோரிஸ் சிஎன்ஜி 

இந்தியாவில் தொடரும் எரிபொருட்களின் விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் சொந்த கார் பயன்பாடு லாபமா? என சிந்தனை இருந்தாலும், வேலை, கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனை என பல்வேறு பயன்பாடுகளுக்காக, கார் பயணம் என்பது அத்தியாவசியமாக மாறி வருகிறது. எனவே, குறைந்த எரிபொருள் செலவில் நிறைவான பயன்பாட்டு அனுபவத்தை பெறுவது எப்படி என யோசிப்பவர்களுக்கு, மாருதி விக்டோரிஸ் காரின் சிஎன்ஜி எடிஷன் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். சிலிண்டர்களால் அதிகப்படியான பூட் ஸ்பேஸ் குறையும் என்ற கவலையும் இந்த காரில் இல்லை. இது அதிகம் விற்பனையாகும் கார் என்ற நிலையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதன் விற்பனை 13,000 யூனிட்களை தாண்டியுள்ளது. இது பிரபலமடைவதற்கு அதன் CNG ஒரு முக்கியக் காரணமாகும்.

மாருதி விக்டோரிஸ் - மைலேஜ்

CNG எடிஷனானது ப்ராண்ட் தரப்பில் கூறப்படுவதை போலவே, திறமையானதா என்பதை அறிய சாலை சோதனையை மேற்கொண்டோம். அதன் முடிவில் எரிபொருளுக்காக மிக குறைந்த தொகையை செலவு செய்து இருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். காரணம்,  சிஎன்ஜி எடிஷனானது நெடுஞ்சாலையில் ஒரு கிலோவிற்கு 26 கி.மீ மைலேஜ் வழங்கியது.  இது அதிகாரப்பூர்வமான 27.02 கி.மீ/கிலோ என்ற அளவிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. நகரத்தில் இந்த அளவு சற்றுக் குறைந்தாலும், ஒரு கிலோமீட்டருக்கு ரூ.4 செலவு என்ற பெட்ரோல் எடிஷனுடன் ஒப்பிட்டால் மிகப்பெரிய சேமிப்பை பெற முடிகிறது. பல வழிகளில், விக்டோரிஸின் சிஎன்ஜி, விலை மலிவாக இருப்பதுடன், அதன் செயல்திறனிலும் ஒரு டீசல் கார் அல்லது ஹைப்ரிட் காருக்குப் போட்டியாக விளங்குகிறது.

மாருதி விக்டோரிஸ் - பவர்ட்ரெயின் விவரங்கள்

விக்டோரிஸில் இடம்பெற்றுள்ள 55 லிட்டர் CNG டேங்கிற்கான வடிவமைப்பானது, விற்பனைக்குப் பின்னர் சேர்க்கப்பட்டதைப் போல இல்லாமல், ஒரு முறையான பூட் பகுதியை வழங்குகிறது. இது விமான நிலையப் பயணங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதுடன், மின்சாரத்தால் இயங்கும் டெயில்கேட்டும் வசதியாக உள்ளது. CNG பயன்முறையில் 87 bhp ஆற்றலுடனும் 5-வேக மேனுவல் கியர்பாக்ஸுடனும் இதன் செயல்திறன் போதுமானதாக உள்ளது. க்ளட்ச் இலகுவாக இருந்தாலும், நகரப் போக்குவரத்தில் செயல்திறன் சீராக இல்லாததால் கியரைக் குறைக்க வேண்டியுள்ளது. ஆனால் நெடுஞ்சாலையில் சிரமமின்றி கையாள முடிகிறது. விக்டோரிஸ் சிஎன்ஜி, சிரமமின்றி ஓட்டுவதற்கும், நல்ல செயல்திறனுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேடிக் எடிஷனை இணைத்தால் பயனர்களை கூடுதலாக கவர வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:CM Vijay: குற்றங்கள் நடக்க கூடாது, வேகமான விசாரணை, கடும் தண்டனை - காவல்துறைக்கு CM விஜய் உத்தரவு

மாருதி விக்டோரிஸ் - சிறப்பம்சங்கள், விலை

காரில் இருந்த கருப்பு அலாய் வீல்கள் கவனத்தை ஈர்க்கின்றன.  பிடித்தமான ஒரு இனிமையான வடிவத்தையும் கார் கொண்டுள்ளது. அதோடு உட்புறம் நன்கு வசதிகள் நிறைந்ததாகவும், போதுமான இடவசதியுடனும் உள்ளது. ப்ராண்டின் மிகவும் பாதுகாப்பு கார் மாடலாக 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. சிஎன்ஜி விக்டோரிஸ் மாடல்களின் ஆரம்ப விலை ரூ. 11.5 லட்சம் ஆகவும், டாப்-எண்ட் மாடலின் விலை ரூ. 14.7 லட்சம் ஆகவும் உள்ளது. அதாவது, எரிபொருள் சிக்கனத்துடன் 5 பேர் பயணிக்கும் வகையிலான ஒரு குடும்ப எஸ்யுவியை தேடுவோருக்கு விக்டோரிஸ் சிஎன்ஜி சிறப்பான தேர்வாக இருக்கும்.


Maruti Suzuki Victoris: மாருதியின் பாதுகாப்பான கார்..! 26KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், குடும்பங்களுக்கான பட்ஜெட்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸ்க்கு சவால், மாருதி 7 சீட்டர் படுதோல்வி - ஹைப்ரிட்டுக்கு ரூ.2.15 லட்சம் சலுகை
இன்னோவா ஹைக்ராஸ்க்கு சவால், மாருதி 7 சீட்டர் படுதோல்வி - ஹைப்ரிட்டுக்கு ரூ.2.15 லட்சம் சலுகை
Skoda Kodiaq RS: இந்தியாவிற்கான ஸ்கோடாவின் வேகமான SUV ஆன் தி வே - ஜுன்.22 புக்கிங் - விலை, ரைவல்ஸ்
இந்தியாவிற்கான ஸ்கோடாவின் வேகமான SUV ஆன் தி வே - ஜுன்.22 புக்கிங் - விலை, ரைவல்ஸ்
Hero Splendor Plus Flex Fuel: உங்க பணத்த மிச்சப்படுத்த வரும் ஹீரோ ஸ்ப்ளெண்டர்+ Flex Fuel E85; விலை, மைலேஜ், அம்சங்கள் என்ன.?
உங்க பணத்த மிச்சப்படுத்த வரும் ஹீரோ ஸ்ப்ளெண்டர்+ Flex Fuel E85; விலை, மைலேஜ், அம்சங்கள் என்ன.?
New Mahindra Scorpio N: கவர்ந்திழுக்கும் அம்சங்களோட உங்க ப்ரியமான கார் வருது; டெஸ்ட்டிங்கில் சிக்கிய ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட்
கவர்ந்திழுக்கும் அம்சங்களோட உங்க ப்ரியமான கார் வருது; டெஸ்ட்டிங்கில் சிக்கிய ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவில் கொங்கு தளபதிகளாக தங்கமணி, வேலுமணி.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- இபிஎஸ் ஷாக்
திமுகவில் கொங்கு தளபதிகளாக தங்கமணி, வேலுமணி.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- இபிஎஸ் ஷாக்
Tamilnadu Round Up: டாஸ்மாக் விவகாரம், கரூர் FIR போட தவறிவிட்டோம், போதை விவகாரம் - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக் விவகாரம், கரூர் FIR போட தவறிவிட்டோம், போதை விவகாரம் - தமிழ்நாட்டில் இதுவரை
VCK Thirumavalavan: ”விஜயின் அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விலகுவோம்” விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி
”விஜயின் அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விலகுவோம்” விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி
Tvk Vijay vs Dmk Stalin : கொத்து கொத்தாக TVK-யில் இணையும் அதிமுக ,பாஜக.! திமுகவினரை தொட கூட முடியாமல் திணறும் விஜய்- இதுதான் காரணமா.?
கொத்து கொத்தாக TVK-யில் இணையும் அதிமுக ,பாஜக.! திமுகவினரை தொட கூட முடியாமல் திணறும் விஜய்- இதுதான் காரணமா.?
Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸ்க்கு சவால், மாருதி 7 சீட்டர் படுதோல்வி - ஹைப்ரிட்டுக்கு ரூ.2.15 லட்சம் சலுகை
இன்னோவா ஹைக்ராஸ்க்கு சவால், மாருதி 7 சீட்டர் படுதோல்வி - ஹைப்ரிட்டுக்கு ரூ.2.15 லட்சம் சலுகை
தினமும் பாலியல் சம்பவத்தால் வேதனை.! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுங்க.! விஜயை நெருக்கும் CPI
தினமும் பாலியல் சம்பவத்தால் வேதனை.! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுங்க.! விஜயை நெருக்கும் CPI
US Iran War: எல்லாம் முடிஞ்ச்..! ஒரு ரூபாய் கொடுக்காம போர் ஓவர், ஈரான் உடன் இன்று அமைதி ஒப்பந்தம் - ட்ரம்ப்
எல்லாம் முடிஞ்ச்..! ஒரு ரூபாய் கொடுக்காம போர் ஓவர், ஈரான் உடன் இன்று அமைதி ஒப்பந்தம் - ட்ரம்ப்
Free Student Hostels : ஒரு ரூபாய் செலவு இல்லை.! மாணவர்களுக்கு இலவச விடுதி- யார் யாருக்கெல்லாம் அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு
ஒரு ரூபாய் செலவு இல்லை.! மாணவர்களுக்கு இலவச விடுதி- யார் யாருக்கெல்லாம் அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு
Embed widget