(Source: ECI/ABP News/ABP Majha)
முதல் இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்கிய இந்தோனேசியா! - பின்னணி என்ன?
Indonesia Hindu state university: இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தீவு நாடான இந்தோனேசியாவில், முதல் முறையாக இந்து பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தீவு நாடான இந்தோனேசியாவில், முதல் முறையாக இந்து பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் நாடு
உலகத்திலேயே அதிக அளவிலான இஸ்லாம் மக்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில், 85 சதவீதத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். தீவு நாடான இந்தோனேசியாவில் 15 ஆயிரத்துக்கும் அதிகமாக தீவுகள் உள்ளன. அதில் ஒன்றான பாலி தீவில் இந்து மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இங்கு கடந்த 1993ம் ஆண்டு இந்து மத ஆசிரியர்கள் சிலர், கல்வி கற்றுக்கொடுக்க ஆரம்பித்தனர். அது கல்வி நிறுவனமாக மாற்றப்பட்டு, கடந்த 1999-ம் ஆண்டு இந்து மத அரசுக் கல்லூரியாக (Hindu Religion State College) மாற்றப்பட்டது. இந்தக் கல்லூரி கடந்த 2004-ம் ஆண்டு இந்து அரசு நிறுவனமாக (ஐஎச்டிஎன்) தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையில் இந்தோனேசிய அதிபர் ஜோகோவி விடோடோ (Jokowi Widodo) கையெழுத்திட்டுள்ளார்.
இந்து உயர் கல்வியைக் கற்பிக்கும் பணி
இந்த புதிய இந்து பல்கலைக்கழகத்துக்கு 'ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா மாநில இந்து பல்கலைக்கழகம் (I Gusti Bagus Sugriwa State Hindu University (UHN- யுஎச்என்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் இந்து உயர் கல்வியைக் கற்பிக்கும் பணியில் ஈடுபடும்.
Turning the Hindu Dharma State Institute (IHDN) in Denpasar, Bali into the country’s first Hindu state university.https://t.co/nVKcaek0Vkhttps://t.co/nVKcaek0Vk
— The Star (@staronline) March 2, 2024
இதன் மூலம் ஐஎச்டிஎன் நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் விரைவில் யுஎச்என் மாணவர்களாக மாற்றப்படுவார்கள். ஐஎச்டிஎன் நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும், பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்படும். அதேபோல ஊழியர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஎச்டிஎன் தலைவர் ஐ கஸ்தி சுதியானா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டாலும், நிறுவனத்தை முறையாக மத்திய அரசு ஒப்படைக்கக் காத்திருக்கிறோம். அரசுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்’’ என்று ஐஎச்டிஎன் தலைவர் ஐ கஸ்தி சுதியானா தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Minister Anbil Mahesh: 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!