மேலும் அறிய

Violence Against Children: குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்: பள்ளிக் கல்வி இயக்ககம் முக்கிய உத்தரவு

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத்‌ தடுப்பு மற்றும்‌ விழிப்புணர்வு வாரம்‌ நவம்பர்‌ 15 முதல்‌ 22 வரை அனுசரிக்கப்படுகிறது. பள்ளி அளவிலான இடை பருவத்‌ தேர்வுகள்‌ காரணமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத்‌ தடுப்பு மற்றும்‌ விழிப்புணர்வு வாரம்‌ இவ்வாண்டு நவம்பர்‌ 25 முதல்‌ 29 வரை கொண்டாடப்படுகிறது.

அனைத்து வகை பள்ளிகளும்‌ பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி அனைத்து மாணவர்களும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ கொண்டாடுவதற்கு பள்ளித்‌தலைமை ஆசிரியரால்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

பள்ளித்‌ தலைமையாசிரியர்‌ அல்லது ஏதேனும்‌ ஒரு குழு பொறுப்பு ஆசிரியர்‌ (House head teacher) "மாணவர்‌ மனசு" திட்டம்‌ சார்ந்து விளக்க உரை காலை வணக்கக்‌கூட்டத்தில்‌ இடம்‌ பெற வேண்டும்‌.

மாணவர்‌ பாதுகாப்பு ஆலோசனை குழு,

பள்ளி அளவிலான குழுவில்‌

> தலைமை ஆசிரியர்‌

> ஆசிரியர்கள்‌ -2

> பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ / பெற்றோர்‌ உறுப்பினர்‌- 2

> பள்ளி மோண்மை குழு பிரதிநிதி - 1

> ஆசிரியரல்லா பணியாளர்‌ - 1

> வெளி நபர்‌ (தேவை எனில்‌) – 1 இடம்‌ பெற்றுள்ளனர்‌.

இக்குழு கூட்டத்தினை விழிப்புணர்வு வாரத்தில்‌ ஏதேனும்‌ ஒரு நாள்‌ பெற்றோர்களின்‌ வசதிக்கேற்ப 28.11.2024 அல்லது 29.11.2024 நடத்தி அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியர்கள்‌ அனுப்பிட வேண்டும்‌.

மாணவர்‌ மனசு

மாணவர்‌ மனசு பெட்டியில்‌ பெறப்படும்‌ கோரிக்கைகள்‌ மற்றும்‌ புகார்களை இக்கூட்டத்தில்‌ நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்களுடன்‌ விவாதித்தல்‌ வேண்டும்‌. உரிய நடவடிக்கையினையும்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

14417 எண்ணிலிருந்து பெறப்படும்‌ புகார்கள்‌ மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரமும்‌ இணைத்து சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌.

பாலியல்‌ புகார்‌

மாணவர்‌ பாதுகாப்பு ஆலோசனை குழு பள்ளியில்‌ பாலியல்‌ புகார்‌ சார்ந்து ஏதேனும்‌ தகவல்‌ பெறப்படின்‌ அதனை உடனடியாக 14417, 1098 ஆகிய எண்ணை தொடர்புகொண்டு தகவல்களை அளித்தல்‌ வேண்டும்‌.

மாணவர்களிடையே குழந்தைகள்‌ உதவி மையம்‌ எண்‌ 1098 மற்றும்‌ 14417 ஆகிய எண்கள்‌ சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்‌ வேண்டும்‌.

இணையதள பாதுகாப்பு

மாணவர்கள்‌ இணையதளத்தில்‌ உள்ள தகவல்களை பாதுகாப்பாக எவ்வாறு கையாளுவது மற்றும்‌ இணையதள பாலியல்‌ வன்முறைகளை தவிர்ப்பது எவ்வாறு என்பது சார்ந்து மகிழ்‌ முற்றம்‌ செயல்பாடாக குழு வாரியாக விவாதம்‌ நடத்தி குழுத்‌ தலைவர்கள்‌ கருத்து கண்காட்சி வகுப்பறையில்‌ காட்சிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
Eye Infection : “கண் சிவப்பு, உறுத்தல், எரிச்சல், நீர் வடிதலா?” பரவுகிறது புதிய வகை காய்ச்சல்..!
Eye Infection : “கண் சிவப்பு, உறுத்தல், எரிச்சல், நீர் வடிதலா?” பரவுகிறது புதிய வகை காய்ச்சல்..!
Embed widget