மேலும் அறிய

பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை; எடுத்த நடவடிக்கைகள் என்ன?- பட்டியலிட்ட கல்வித்‌துறை!

அரசுப் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்‌ துறை விழிப்புணர்வு நடவடிக்கைகள்‌ குறித்து பள்ளிக் கல்வித்‌துறை அரசு செயலாளர்‌ தெரிவித்து உள்ளதாவது:

* பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல்‌ துன்புறுத்தல்களை தடுத்திட அரசு மேற்கொண்டு வரும்‌ முனைப்பான நடவடிக்கைகள்‌ அனைத்து பள்ளிகளிலும்‌ மாணவர்கள்‌ பாதுகாப்பு ஆலோசனைக்‌ குழு

* மாணவ, மாணவியர்‌ புகார்‌ தெரிவிக்க பாடநூல்களின்‌ பின்புற அட்டைகளில்‌ கட்டணமில்லா தொலைபேசி எண்கள்‌

* பள்ளிகளில்‌ மாணவர்‌ மனசு புகார்‌ பெட்டி

* மாணவ மாணவிகளை வெளியில்‌ அழைத்துச்‌ செல்ல பெற்றோர்‌ - உயர்‌ அதிகாரிகள்‌ அனுமதி பெறுதல்‌

* மாணவ மாணவியர்களிடம்‌ ஒழுங்கீனமாக நடப்பவர்கள்‌ மீது காவல்‌ துறை நடவடிக்கை

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில்‌ நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல்‌ துன்புறுத்தல்‌ சார்ந்து பன்ளி நிர்வாகி மற்றும்‌ பள்ளி முதல்வர்‌ மீது காவல் துறையால்‌ குற்றவியல்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதைத்‌ தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளுக்கு அரசால்‌ சிறப்பு அதிகாரி நியமனம்‌ செய்யப்பட்டு பள்ளி நிர்வாகம்‌ சிறப்பு அதிகாரிகளின்‌ நேரடி கட்டுப்பாட்டில்‌ கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றவியல்‌ நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில்‌ பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல்‌ துன்புறுத்தல்‌  காரணமாக பள்ளி நிர்வாகி, முதல்வர்‌ மற்றும்‌ சார்ந்த ஆசிரியர்‌ மீது குற்றவியல்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ/மாணவிகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுக்கும்‌பொருட்டு ஒவ்வொரு பாடப்புத்தகத்தின்‌ பின்பக்க அட்டையில்‌ 14417, 1098 போன்ற கட்டணயில்லா தொலைபேசி எண்கள்‌ கொடுக்கப்பட்டு, பாலியல்‌ துன்புறுத்தல்‌ சார்ந்த விவரங்களை புகார்‌ அளிக்க மாணவ/மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும்‌ மாணவ/ மாணவியர்களின்‌ பாதுகாப்பை உறுதிசெய்யும்‌ பொருட்டு மாணவர்கள்‌ பாதுகாப்பு ஆலோசனைக்‌ குழு SSAC Student safeguarding advisory குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும்‌ மாதம்‌ ஒருமுறை இக்குழு கூடி மாணவிகளுக்கெதிரான புகார்‌ ஏதும்‌பெறப்படின்‌ அதுசார்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்‌ மனசு

மேலும்‌ ஒவ்வொரு பள்ளியிலும்‌ "மாணவர்‌ மனசு” என்ற புகார்ப்‌ பெட்டி வைக்கவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும்‌ உள்ள SSAC குழு உறுப்பினர்களுக்கு போக்சோ சட்டம்‌ குறித்து மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌ வாயிலாக பயிற்சி மற்றும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, பள்ளிகளில் இருந்து மாணவ/மாணவியர்களை என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் & Guide, JRC போன்ற அமைப்புகளின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ விளையாட்டு போட்டிகள்‌ காரணமாக பள்ளியை விட்டு வெளியே மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ அழைத்துச்‌ செல்ல நேரிடும்பொழுது ஒவ்வொரு மாணவ, மாணவியரின்‌ பெற்றோரிடமும்‌ தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன்‌ பிறகு மாவட்டக்‌ கல்வி அலுவலரிடம்‌ ஒப்புதல்‌ பெறப்பட வேண்டும்‌ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன் அனுமதி முக்கியம்

மேலும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ முன் அனுமதியின்றி மாணவ, மாணவியரை பள்ளியைவிட்டு வெளியே அழைத்துச்‌ செல்லக்கூடாது எனவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, மாணவ/மாணவியரை வெளியே அழைத்துச்‌ செல்லும்‌ பொழுது 10 மாணவர்களுக்கு ஒரு ஆண்‌ ஆசிரியர்‌ எனவும்‌ 10 மாணவிகளுக்கு ஒரு பெண்‌ ஆசிரியை எனவும்‌ உடன்‌ செல்ல வேண்டும்‌ என அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன்‌ மாணவர்‌/ மாணவியர்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல்‌ ஆசிரியர்கள்‌, ஆசிரியைகள்‌ உடன்‌ செல்ல வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறையைச்‌ சார்ந்த இயக்குநர்கள்‌/ இணை இயக்குநர்கள்‌ மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும்‌பொழுது மேற்கண்ட பணிகளை கண்காணித்து தொடர்‌ நடவடிக்கைகள்‌ எடுக்க அரசால்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ மாணவ, மாணவியர்களிடம்‌ ஒழுக்கக்கேடான முறையில்‌ நடந்து கொள்பவர்கள்‌ மீது காவல்‌ துறை வாயிலாக குற்றவியல்‌ நடவடிக்கை எடுப்பதுடன்‌ துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படு கிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget