IIT Madras: 20 ஆண்டுகளில் அதிகரிக்கப்போகும் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வு- சென்னைக்கு வரப்போகும் ஆபத்து..?
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், அடுத்த 20 ஆண்டுகளில் கட்டிடங்களால் மிக அதிகளவில் கார்பன் உமிழ்வு ஏற்படும் என்றும் அதில் சென்னை அதிகளவு உமிழும் பகுதியாக இருக்கும் எனவும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், அடுத்த 20 ஆண்டுகளில் கட்டிடங்களால் மிக அதிகளவில் கார்பன் உமிழ்வு ஏற்படும் என்றும் அதில் சென்னை அதிகளவு உமிழும் பகுதியாக இருக்கும் எனவும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐஐடி மெட்ரொஸ் ஆராய்ச்சியாளர்கள், விரைவான நகரமயமாக்கல் காரணமாக கட்டுமானங்கள் மற்றும் கட்டிட செயல்பாடுகளில் இருந்து மட்டும் 2040-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 231.9 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு (Co2) வெளியாகும் எனக் கணித்துள்ளனர். கட்டிடங்களின் செயல்பாட்டுத் தேவைகளுக்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு (Renewable sources of energy) மாறினால் சென்னையில் கார்பன் உமிழ்வு குறையும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கார்பன் உமிழ்வு
விரைவான நகரமயமாக்கல் காரணமாக நாடு முழுவதும் கட்டுமானப் பொருட்கள் கையிருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கார்பன் வெளியேற்றத்திற்கு நான்கில் ஒரு பகுதி கட்டிடத் தொழில்தான் காரணம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மூலப் பொருட்களை (சிமெண்ட், எஃகு உற்பத்தி செய்தல், அவற்ரற கட்டுமானப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து, குறிப்பாக கட்டுமானப் பணிகளின்போது பயன்படுத்தப்படும் ஆற்றல் ஆகியவற்றால் அதிகளவில் கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது.
இந்த ஆய்வு குறித்து விளக்கம் அளித்த ஐஐடி மெட்ராஸ் கட்டிட பொறியியல் துறை பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், "கார்பன் உமிழ்வைப் பொறுத்தவரை நமது இலக்கை அடைய வேண்டுமெனில், எதிர்காலத்தில் கார்பன் உமிழ்வு வழக்கமாக எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என அளவுகோல் நிர்ணயித்து அதன்படி செயலாற்ற வேண்டியது அவசியம். நாங்கள் மேற்கொண்ட ஆய்வு இந்த சிக்கலுக்குத் தீர்வுகாண்பதில் ஒரு படியாக விளங்குகிறது" எனக் குறிப்பிட்டார்.
ஆய்வு விவரம்
1. 2040ம் ஆண்டில் சென்னை எப்படி இருக்கும் என்பதை உருவகப்படுத்த ஜியோ ஸ்பேசியல் எனப்படும் புவி- இடம் சார்ந்த மாடலிங் தொழில்நுட்பங்களை (Geo-spatial modeling techniques) இக்குழுவினர் பயன்படுத்தினர்.
2. நகரமயமாக்கல் காரணமாக சென்னையில் கார்பன் வெளியேற்றத்தின் அளவை அறிய வாழ்க்கைச் சுழற்சி பகுப்பாய்வு (Life Cycle Analysis - LCA) நுட்பங்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.
3. கார்பன் உமிழ்வை மிகப்பெரிய அளவில் குறைக்க வழிவகுக்கும் தொழில்நுட்பங்களை மதிப்பிடுவதற்காக, சென்னை நகரின் வளர்ச்சியில் மாற்றுக் கட்டுமானப் பொருட்கள் மற்றும் ஆற்றல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறித்த பல்வேறு காட்சியமைப்புகளை இக்குழுவினர் உருவாக்கினர்.
கார்பன் உமிழ்வைக் குறைப்பது எப்படி?
மூன்று நடவடிக்கைகள் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியும் என ஆய்வுக் குழுவினர் பரிந்துரைத்து உள்ளனர்.
1. பாரம்பரிய சிமெண்ட்டை குறைந்த கார்பன் கொண்ட சிமெண்ட்டாக மாற்றுதல்
2. கட்டிடங்களை இடிக்கும்போது ஏற்படும் கழிவுகளை எதிர்காலக் கட்டுமானத்தில் மீண்டும் பயன்படுத்துதல்
3. இயங்கி வரும் கட்டிடங்களின் ஆற்றல் தேவைகளைளப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு மாறுதல்
ஆற்றல் ஆதாரங்களை மாற்றுவதன் மூலம்தான் கார்பன் உமிழ்வை மிகப் பெரிய அளவில் மாற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். ஒரு கட்டிடத்தின் செயல்பாட்டு ஆற்றல் தேவையில் 50% தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தினால் 2019ல் இருந்து 2040ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்தமாக 115 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் உமிழ்வு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்க
பாரம்பரிய சிமெண்ட்டுக்கு பதிலாக 'கார்பன் குறைந்த' சிமெண்ட்டைப் பயன்படுத்தியபோது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.