Higher Education: பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்: ஏப்.3 முதல் பயிற்சி வகுப்புகள்
12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் உயர் கல்விக்கு எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று வழிகாட்டும் வகையில் தமிழக அரசின் பயிற்சி வகுப்புகள், ஏப்ரல் 3 முதல் தொடங்குகின்றன.
12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் உயர் கல்விக்கு எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று வழிகாட்டும் வகையில் தமிழக அரசின் பயிற்சி வகுப்புகள், ஏப்ரல் 3 முதல் தொடங்குகின்றன.
தமிழக மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மார்ச் 22ஆம் தேதியுடன் முடிந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து மார்ச் 25 முதல் நீட் தேர்வு குறித்த பயிற்சி வகுப்புகள், கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.
நான் முதல்வன் திட்டம்
இந்த நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் உயர் கல்விக்கு எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று தமிழக அரசு நான் முதல்வன் திட்டம் மூலம் வழிகாட்டி வருகிறது. அந்த வகையில் அரசின் பயிற்சி வகுப்புகள், ஏப்ரல் 3ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறுகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக 03.04.2024 முதல் 15.05.2024 வரை உயர்கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த வகுப்புகள் நடைபெற உள்ளதால், அதனை முழுமையான வகையில் பயன்படுத்திக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இப்பயிற்சி சிறப்பாக நடைபெற, உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை செம்மையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொறியியல், மருத்துவம், நர்சிங், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி நடைபெற உள்ளதால் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.
- உயர் கல்வி சேர்க்கைக்கான பாட வல்லுநர்களின் நேரடி வழிகாட்டுதல்கள்
- வீடியோ உள்ளடக்கம் மூலம் பல்வேறு உயர் கல்வி வாய்ப்புகள்/படிப்புகள்.
எனவே இதன் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை முறையாகப் பராமரித்து மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்’’.
இவ்வாறு தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.
பயிற்சி வகுப்புகள் குறித்து விரிவாக அறிய