மேலும் அறிய

போராடியே இறந்துபோன கவுரவ விரிவுரையாளர்கள்; நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக- ராமதாஸ்

போராடிவரும் கவுரவ விரிவுரையாளர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்- ராமதாஸ்.

கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழ்நாட்டில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 2009-ம் ஆண்டு முதன்முதலில் நியமிக்கப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்பட்டது. அதன்பின் அவர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுகிறது. 

பிப்.9 முதல் தொடர் போராட்டம்

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைப்படி தங்களின் ஊதியத்தை ரூ.57,800 ஆக உயர்த்த வேண்டும், அனைத்து கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத ஊதியம் வழங்கவேண்டும். பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. 20 ஆண்டுகளாக பணியாற்றும்  கவுரவ விரிவுரையாளர்களுக்கு  பணிப்பாதுகாப்பு கிடையாது. அடிப்படை உரிமைகளுக்காக போராடிய பலர் இறந்துபோனார்கள். அவர்களின் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. ’உயர் கல்வியில் ஒளிரும் தமிழ்நாடு’ என்ற பலத்த குரலில் முழங்கும் அரசு, கல்வியை வழங்கும் கவுரவ விரிவுரையாளர்களின் குரலை செவிகொடுத்து கேட்க இயலாமல் உள்ளது வருத்தமளிக்கிறது. 

இந்தியாவிலேயே மிகக்குறைந்த ஊதியம்

கவுரவ  விரிவுரையாளர்களின் ஊதியம் தொடர்பாக 28.01.2019- தேதி ஆணையிட்ட பல்கலைக்கழக மானியக்குழு ஒரு பாடவேளைக்கு ரூ.1,500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. 

இந்தியாவில் பல மாநிலங்களில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் தமிழ்நாட்டில்தான் வழங்கப்படுகிறது. அதனால் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 

போராடிவரும் கவுரவ விரிவுரையாளர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். யாரையும் பின் தங்கவிடமாட்டோம் என்று சொன்னால் மட்டும் போதாது’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
Embed widget