Free TNPSC Coaching: குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி: மனிதநேயம் அகாடமி அறிவிப்பு..!
குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுக்கு இணையம் மூலம் இலவசப் பயிற்சி வழங்கப்படும் என்று மனிதநேயம் பயிற்சி மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுக்கு இணையம் மூலம் இலவசப் பயிற்சி வழங்கப்படும் என்று மனிதநேயம் பயிற்சி மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலவச கோச்சிங்:
சமுதாய மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு கடந்த 2005ஆம் ஆண்டு மனிதநேயம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. மனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மூலம், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மாணவ- மாணவியர்களும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டுமென்கிற உயர்ந்த நோக்கோடு கடந்த 16 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ், இந்தியவனத்துறை பணி ஆகிய பதவிகளுக்கும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1,II, IIA (DC, DSP, DRO, DEO, CTO), SUB-INSPECTOR, A.E(HIGHWAYS, RURAL DEVELOPMENT & PANCHAYAT RAJ, PWD (CIVIL, ELECTRICAL) போன்ற பதவிகளுக்கு இதுவரை 3660 மாணவ-மாணவியர்கள் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவிலும் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.
குரூப்-4 (VAO, Junior Assistant - Security, Non Security, Bill Collector Grade -1. Field Sureyor, Draftsman, Typist, Steno-Typist) போன்ற பதவிகளில் இதுவரை 30,000-க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்று பணியில் உள்ளனர். நிறுவனம் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்ற மாணவர்களில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கான நல்வாய்ப்பாய் டிஎன்பிஎஸ்சி Gr-2 & 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அமைந்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.
கொரோனா பெருந்தொற்று மற்றும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படும் கற்றல் இடைவெளியை முற்றிலும் நீக்கும் முயற்சியாக ஏற்கெனவே யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கான இணையவழி பயிற்சி மனிதநேயம் அகாடமியால் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 மற்றும் 2A தேர்வுக்கான 5529 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு 23.02.2022 வெளியிடப்பட்டது. முதல்நிலைத் தேர்வு 21.05.2022 அன்று நடைபெற்றது. இதன் முடிவு 08.11.2022 அன்று வெளியிட்டது.
சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள், முதலாம் தலைமுறை பட்டதாரிகள், விளிம்புநிலை மக்கள் கிராமப்புறத்தை சார்ந்தவர்கள் மற்றும் எளியோர் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் மனிதநேய ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகம் 16 வருடங்களாக தொடர்ந்து இலவசமாக அரசு தேர்வுகளுக்கு (UPSC, TNPSC) பயிற்சி அளித்து வருகின்றது. இதன்மூலம் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் அடியெடுத்து வைத்த முதலாம் தலைமுறை அரசு பணியாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
முதன்மைத் தேர்விற்கான பயிற்சி திட்டம்
முற்றிலும் புதிய முயற்சியாக முதன்மைத் தேர்வுக்கான பயிற்சியை இத்தேர்வில் இருந்து இணைய வழியில் மேற்கொள்கிறோம். எங்களின் பல்வேறு ஆக்கப்பூர்வமான புதிய முயற்சிகளுக்கு எப்போதும் போல மனிதநேய மாணவர்களின் வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு வரை எங்கள் பயிற்சி மையத்தில் வருடத்திற்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களை சென்னையில் பிரதான இடங்களில் ஏழு மையங்களில், முறையே காலை, மதியம் மற்றும் மாலை எனும் மூன்று சுழற்சி முறைகளில் தேர்விற்கு பயிற்றுவித்ததனால் மத்திய, மாநில அரசு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். வெற்றி வாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த குரூப் 2 தேர்வில் பங்குபெற்று வெற்றி பெறுவதற்கு எங்களின் தனித்துவமான பயிற்சி உத்தி ஒரு முக்கிய காரணியாகும். சிறந்த கல்வி வல்லுனர்கள், எங்கள் மையத்தில் படித்து அரசு பணியில் உள்ளோர் மற்றும் சிறந்த ஆசிரியர்களின் துணையுடன் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சியை இணையவழியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இணைய வழிப் பயிற்சி
மொத்தம் 58,081 மாணவர்கள் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு என்பது நடைமுறையில் சாத்தியமில்லாததால் இணைய வழி மூலமாக வீட்டில் இருந்தபடியே படிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் வலைத்தளத்தின் வாயிலாக ( www.mntfreeias.com) முதன்மைத் தேர்விற்கான பயிற்சி வழங்கப்படும்.
முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சீரிய இடைவெளியில் பாடக் குறிப்புகள் இணையதளத்தில் பகிரப்படும். மேலும் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்க மாதிரி வினாக்கள் இணையதளம் மூலம் பகிரப்பட்டு அதற்கான மாதிரி விடைகள் இணையதளத்தின் வாயிலாகவே பகிரப்படும் இவ்வாறு பகிரப்பட்ட மாதிரி விடைகளை மாணவர்கள் தங்களின் விடைகளுடன் ஒப்பீட்டு எழுதும் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு பாட நூல்கள் விவரம், முதன்மைத்தேர்வை அணுகும் முறை, எழுத்துப் பயிற்சி மற்றும் முதன்மைத் தேர்வு சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து உத்திகளும் இணைய வழியாக பகிரப்படும். இன்று (டிசம்பர் 4ஆம் தேதி) முதல் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சிகள் இணைய வழியாக துவங்கப்பட்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி நிறைவு பெறும்
எனவே முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற மனிதநேயம் மாணவர்கள் மற்றும் பிற மாணவர்கள் அனைவரும் தொலைபேசி மூலமாக 044-24358373, 24330095, 9840439393 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம். இணையத்தளத்தில் mntfreeias.com பதிவு செய்துகொள்ளலாம்’’.
இவ்வாறு மனிதநேயம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.