மேலும் அறிய

Kalaignar Karunanidhi Lesson: ’கலைஞரின் நாவும் பேனாவும்’- 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம் இதுதான்!

ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற தலைப்பில், தமிழுக்கு அவர் ஆற்றிய சேவைகள், பங்களிப்புகள் குறித்தவை இந்தப் பாடத்தில் இடம்பெற்றுள்ளன. 

2023-24ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்த பாடப் புத்தகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில்   ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.

ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழியே பாடல் மட்டும் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது முதல்முறையாக அவர் குறித்த பாடம் இடம் பெற்று உள்ளது.

அந்தப் பாடத்தில், 

’’கலைஞரின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஐயுதங்கள். இயல் எழுதி, இசை எழுதி, நாடகம் எழுதி முத்தமிழுக்கும் தம் பங்கினை முழுமையாக அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்! இரண்டு லட்சம் பக்கங்களுக்கும் அதிகமான எழுத்து கலைஞருடையது. அன்பென்ற மை ஊற்றி அருந்தமிழ் கடிதங்கள் எழுதியவர்.

எதிர்வரும் எந்தக் கேள்விக்கும் சளைக்காது வந்து விழும் சுவையான பதில்களாலும் கேட்போரைக் கட்டிப்போடும் அருவிப் பேச்சாலும் தமிழர் மனங்களைக் கொள்ளை கொண்டவர். 

முத்தாரம், முரசொலி, வெள்ளி வீதி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர்; "பொறுத்தது போதும் பொங்கி எழு" என்பன போன்ற தீந்தமிழ் வசனங்களால் திரை உலகிற்குத் திசைகாட்டியவர். 

பேரறிஞர் அண்ணா இறந்தபோது,

உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்த்தோமே

கண்ணெய்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்

இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?

என்ற வரிகளால் கேட்போரை இதயமுருகச் செய்தவரும் அவர்தான்! கரும்பினும் இனிய கவிதைகள் பற்பல படைத்தவரும் அவர்தான்!

தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம், திருக்குறள் உரை, சிலப்பதிகார நாடகம், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் என 178க்கும் மேற்பட்ட படைப்புகளைக் செந்தமிழுக்குச் சுவையாய் ஆக்கித் தந்திருக்கிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க வழிகாட்டியுள்ளார். தொல்காப்பியம், பதினெண் மேல்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியம், முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகிய 41 செவ்வியல் இலக்கியங்களை ஆய்வு செய்தல், மொழிபெயர்த்தல், பதிப்பித்தல் போன்ற பணிகளை வரையறுத்து செம்மொழி உயராய்வு மையத்திற்கு உயிரூட்டினார். 2010இல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி, இமயக் கொடுமுடி முதல் குமரித் தாய்மடி வரை செம்மொழியான தமிழ்மொழியாம் எனச் செம்மாந்து ஒலிக்கச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

வாழிய செம்மொழித் தமிழ்! வாழிய தமிழ்நாடு’’

இவ்வாறு அந்த பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget