மேலும் அறிய

சென்னை, மதுரை காமராசர் பல்கலை.களின் நிதி நெருக்கடி: அரசு கண்டுகொள்ளாதது ஏன்?- அன்புமணி கேள்வி

சென்னைப் பல்கலைக்கழகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் வெவ்வேறு காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''சென்னைப் பல்கலைக்கழகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் வெவ்வேறு காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு தீர்வு காண வேண்டும் என்று இரு பல்கலைக்கழகங்களின் பணியாளர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள்,  ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் கடந்த  டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அதேபோல், ஓய்வூதியர்களுக்கும் இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அங்குள்ள பணியாளர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

வறண்ட நிதி ஆதாரம்

காமராசர் பல்கலைக்கழகத்தின் அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மூலதன நிதி ரூ.300 கோடி ஏற்கனவே செலவு செய்யப்பட்டு விட்ட நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால், அரசுத் தரப்பில் நிதியுதவி வழங்கப்படாத நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியவில்லை. இப்போது இரு மாதங்களாக ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், இம்மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது.  இது மிகவும் மோசமான நிலை ஆகும்.

இன்னொருபுறம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை முடக்கி வைத்திருப்பதால், அதன் விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு  வழங்குவதற்கு கூடத்  தடுமாறும் நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

உண்ணாவிரதப் போராட்டம்

அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேற்று உண்ணாநிலை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும் அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை வருமானவரித்துறைக்கு  சென்னை பல்கலைக்கழகம் ரூ424 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறது.  அதற்கான முதன்மைக் காரணம், சென்னைப் பல்கலைக்கழகங்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியை தமிழக அரசு குறைந்து வந்ததுதான். அதனால்தான் சென்னைப் பல்கலைக்கழகம் ஓய்வூதிய நிதி உள்ளிட்டவற்றை ஊதியம் வழங்க பயன்படுத்தியது.

தமிழக அரசுதான் பொறுப்பு

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.500 கோடி வரை உபரி நிதி இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியது தான் நிதிநிலை அறிக்கை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையிலிருந்து பல்கலைக்கழகம் மீளவும் அரசுதான் உதவ வேண்டும்.  ஆனால், தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது. இது  பெரும் தவறு.

தமிழ்நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம்.  பெருந்தலைவர் காமராசரால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயரையே தாங்கி நிற்கும் கல்வி நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம். தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இந்த இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும்,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை  நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக  அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Embed widget