மேலும் அறிய

ESLC Private Exam: தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு; விண்ணப்பிப்பது எப்படி?

ESLC Private Exam 2022 Time Table: தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் அக்டோபர் 10 - 14 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் அக்டோபர் 10 - 14 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் செப்டம்பர் 6 முதல் 10ஆம் தேதி வரை சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்,

சேவை மையங்களின் விவரத்தை http://dge.tn.gov.in இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பு:

தனித்தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு அக்டோபர்‌ மாதம் நடைபெற உள்ளது. 

1. ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பங்களை வரவேற்றல்‌

அக்டோபர்‌ 2022-ல்‌ நடைடுபறவுள்ள தனித்‌ தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.10.2022 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித்‌ தேர்வர்கள்‌ 06.09.2022 முதல்‌10.09.2022 வரை http://dge.tn.gov.in  என்ற இணையதளத்தில்‌ குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre) நேரில் சென்று online மூலம்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

2. தேர்வுக்‌ கட்டண விவரம்‌

விண்ணப்பத்துடன்‌ தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.125/- மற்றும்‌ ஆன்லைன்‌ பதிவுக்‌ கட்டணம்‌ ரூ.50/-மொத்தம்‌ ரூ.175/-ஐ பணமாக சேவை மையங்களில்‌ நேரடியாக செலுத்தலாம்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ விண்ணப்பிக்கத்‌ தவறியவர்கள்‌ 12.09.2022 மற்றும்‌ 13.09.2022 ஆகிய நாட்களில்‌ தட்கல்‌ விண்ணப்பக் கட்டணத்தொகை ரூ.500/- கூடுதலாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்‌.

3. விண்ணப்பத்துடன்‌ இணைக்கப்படவேண்டியவை

முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌ 

விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்துடன்‌ சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌ / பதிவுத்தாள்‌ நகல்‌ / பிறப்புச்‌ சான்றிதழ்‌ நகல்‌ இவற்றில்‌ எதேனும்‌ ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

ஏற்கனவே எட்டாம்‌ வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌ 

ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண்‌ சான்றிதழின்‌/ சான்றிதழ்களின்‌ நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

தனித்தேர்வர்கள்‌ ரூ.42-க்கான அஞ்சல்‌ வில்லை ஒட்டப்பட்ட, பின் கோடுடன்‌ கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்றை விண்ணப்பத்துடன்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

4. ஆன்லைன்‌ மூலம்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்‌. தபால்‌ மூலம்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.

5. இந்தத் தேர்விற்கான விரிவான தகவல்களை http://dge.tn.gov.in  என்ற இணையதளத்தில்‌ காணலாம்‌.

தனித்‌ தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு அக்டோபர்‌ - 2022-க்கான தேர்வுக்கால அட்டவணை

தேதி  கிழமை நேரம்‌ பாடம்‌
10.10.2022  திங்கட்‌கிழமை காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  தமிழ்‌
11.10.2022  செவ்வாய்‌க்கிழமை‌ காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  ஆங்கிலம்‌
12.10.2022  புதன்‌ கிழமை  காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  கணிதம்‌
13.10.2022 வியாழக்‌கிழமை காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  அறிவியல்‌
14.10.2022 வெள்ளிக்கிழமை‌  காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  சமூக அறிவியல்‌

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Biggboss Tamil Season 8 LIVE: ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Biggboss Tamil Season 8 LIVE: ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Embed widget