மேலும் அறிய

Teachers Protest: சம ஊதியம் கோரி போராடினால் கைது செய்வதா?- ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக- அன்புமணி

தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

2009 மே மாதம் 31ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப் படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஊதிய முரண்பாடு 15 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 19ஆம் தேதி முதல், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் முதல் நாளான 19ஆம் நாள் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை கைது செய்தது.

தொடர்ந்து 20ஆம் தேதியான நேற்று மீண்டும் போராட்டம் நடத்தியபோதும் அவர்களை காவல்துறை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தது. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து கொடுமைக்குள்ளாவதை நியாயப்படுத்தவே முடியாது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை நான் மட்டும் வலியுறுத்தவில்லை. இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்தியபோது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று 311ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது நியாயமற்றது.

ஒடுக்குவதே அரசின் கொள்கை


இடைநிலை ஆசிரியர்கள் எப்போது போராட்டம் நடத்தினாலும், அதை ஒடுக்குவதே அரசின் கொள்கையாக உள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் அக்குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

அதனால், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை அக்டோபர் 5ஆம் நாள் காவல்துறை விரட்டியடித்தது; பலரை கைது செய்தது. அப்போதும் மூவர் குழுவின் அறிக்கை அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்று அரசு மீண்டும் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் 5 மாதங்களாகியும் மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால்தான் இடைநிலை ஆசிரியர்கள் இப்போது மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பெரும் அநீதி

ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதியாகும்.  தங்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அதைவிடக் கொடுமையாக அநீதியாகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு, இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!
சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K Bhagyaraj: நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
Bhagyaraj Movies: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
CM Vijay: ”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
Embed widget