மேலும் அறிய

Education Loan Mela : விழுப்புரத்தில் நாளை மாபெரும் கல்விக்கடன் முகாம் - முழுவிவரம் உள்ளே

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில், மாபெரும் கல்விக்கடன் முகாம்  நாளை 15.02.2024 நடைபெறவுள்ளது என மாவட்டஆட்சியர் சி.பழனி, அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், மாபெரும் சிறப்பு கல்விக்கடன் மற்றும் கல்விக்கடன் வழங்கல் முகாம் வருகின்ற பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல், பட்டய பொறியியல், மருத்துவம், விவசாயம், செவிலியர், சட்டம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற 2 ஆண்டிற்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடனை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ, மாணவியர்கள் பெற்றோருடன் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், மாணவர்கள் பெற்றோரின் பாஸ்போர்ட் புகைப்படம்-3, பான்கார்டு நகல், 10,11,12ம் வகுப்பு மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று நகல், ஜாதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், கல்லூரி கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கவுன்சலிங் சான்று, சேர்க்கைக்கான ஆவண நகல், கல்லூரி சேர்க்கை கடித நகல், கல்லூரி கட்டண விபரங்களுக்கான சான்று நகல், கல்லூரியின் அப்ரூவல் சான்று நகல், கல்விக் கடன் பெறும் வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கி பாஸ்புக் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து பயன்பெறலாம்.

கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in, https://www.jansamarth.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கல்விக்கடன் முகாம் நடைபெறும் தினத்தில் விண்ணப்பத்தின் நகல் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாதவர்கள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக இ-சேவை மையம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்யப்படும்.

இந்த சிறப்பு முகாமில் விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மற்ற மாவட்டங்களில், மாநிலங்களில், வெளிநாடுகளில் தற்போது படிப்பவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.  கல்விக்கடன் தொகை ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 இலட்சம் வரை மாணவர்கள், பெற்றோரின் உறுதி மொழி பத்திரம் மட்டும் போதுமானது. மேலும், ரூ.7.5 இலட்சத்திற்கு மேல் கல்விக்கடன் தேவைப்படுவோர் கட்டாயம் சொத்து பிணை அவசியம் மற்றும் 3ம் நபர் உத்திரவாதமும் கொண்டுவர வேண்டும்.

முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் பங்கேற்று விண்ணப்பங்களை பெற்று தகுதியானவர்களுக்கு கல்விக்கடன் வழங்க, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மூலம், விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget