TN School Leave: மாணவர்களே தயாராகுங்க... பயமுறுத்தும் வைரஸ் காய்ச்சல்: முன்கூட்டியே வரும் இறுதி தேர்வுகள்?
தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் மற்றும் கோடை வெயில் காரணமாக முன்கூட்டியே இறுதித் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் மற்றும் கோடை வெயில் காரணமாக முன்கூட்டியே இறுதித் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சலைத் தடுக்கும் பொருட்டு, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மார்ச் 16 முதல் 26ஆம் தேதி இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், மிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் மற்றும் கோடை வெயில் காரணமாக முன்கூட்டியே இறுதித் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறை இல்லை
புதுச்சேரியை போன்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை எனவும் அதனால் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னதாக, புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது.
இதையடுத்து தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேர்வு எப்போது?
கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் நிலையில், 2022- 23ஆம் கல்வியாண்டு தாமதமில்லாமல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நேற்று (மார்ச் 14ஆம் தேதி) தொடங்கியது. அதேபோல ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கமாக நடத்தும் ஆண்டு இறுதித் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

