மேலும் அறிய

ஆசிரியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் திராவிட மாடல் அரசு.. என்றும் உறுதுணையாய் இருப்போம்: உதயநிதி உறுதி

ஆசிரியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் திராவிட மாடல் அரசு.. என்றும் உறுதுணையாய் இருப்போம்: உதயநிதி உறுதி

சமக்ர சிக்‌ஷா ஊதிய விவகாரத்தில் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு திராவிட மாடல் அரசு மதிப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமக்ர சிக்‌ஷா எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்கும் ஆசிரியர்களின் ஊதியத்துக்கும் மத்திய அரசு நிதி தருகிறது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று சமக்ர சிக்‌ஷா திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

செப்டம்பர் மாத ஊதியம் நிலுவை

இதனால் தமிழ்நாடு அரசு அக்டோபர் மாதத்துக்கான ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு  ஊதியத்தைத் தரவில்லை. இதற்குக் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த நிலையில் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு திராவிட மாடல் அரசு மதிப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2151.59 கோடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை.

இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 27 அன்று பிரதமர் மோடியைச் சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார். ஆனாலும், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை. நமது திராவிட மாடல் அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

32,500 பேருக்கும் செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிக்க நடவடிக்கை

ஒன்றிய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நம் திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’.

இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
Embed widget