மேலும் அறிய

அரசுப்பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்கள்: உடனே இடமாற்றம் செய்ய உத்தரவு - ஏன்?

அரசுப்பள்ளி வளாகங்களில் செயல்படும் மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலகங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கப் பள்ளி இயக்குநர், தனியார் பள்ளி இயக்குநர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறு

பள்ளி வளாகத்தில்‌ உள்ள கட்டிடங்களில்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலகங்கள்‌ / மாவட்டக்‌ கல்வி அலுவலகங்கள்  செயல்பட்டு வருவதாகவும்‌, அது பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ளதாகவும்‌ அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பள்ளி வளாகத்தில்‌ அமைந்துள்ள அலுவலகங்களை உடனடியாக பள்ளி வளாகத்திற்கு வெளியே ஏதேனும்‌ ஒரு வாடகைக்‌ கட்டிடத்திற்கு இடம்‌ மாற்றம்‌ செய்து, அதற்கு பொதுப்பணித் துறையால்‌ நிர்ணயம்‌ செய்யப்படும்‌ வாடகையினை நிர்ணயம்‌ செய்து கொள்ளவும்‌ அதற்கான கருத்துருவினை 30.04.2024க்கு முன்னர்‌ அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை 

மேலும்‌ அடுத்த‌ கல்வி ஆண்டு முதல்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலகங்கள்‌ / மாவட்டக்‌ கல்வி அலுவலகங்கள்‌ பள்ளிக்‌ கட்டிடங்களில்‌ செயல்படவில்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்தல்‌ வேண்டும்‌. இல்லையெனில்‌ மேற்காணும்‌ பணியினை செயலாக்கம்‌ செய்யப்படவில்லை என்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பள்ளி வளாகத்தில்‌ உள்ள கட்டிடங்களில்‌ இயங்கி வரும்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலகங்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலகங்களை பொதுப் பணித்துறை நிர்ணயிக்கும்‌ வாடகையின்‌ அடிப்படையில்‌ உடனடியாக இடம்‌ மாற்றம்‌ செய்து விட்டு அதன்‌ அறிக்கையினை 10.04.2024 தேதிக்குள் இந்த இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்.

அதேபோல‌ வரும்‌ கல்வி ஆண்டில்‌, பள்ளி வளாகத்தில்‌ உள்ள கட்டிடங்களில்‌ எந்த ஒரு முதன்மைக்‌ கல்வி அலுவலகங்கள்‌ , மாவட்டக்‌ கல்வி அலுவலகங்களும்‌ செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்‌ கொள்ளவும்‌, அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ / மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ (தொடக்கக்‌ கல்வி) அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் வாசிக்கலாம்: TNSET 2024: மாநில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதி என்ன? முக்கியத் தகவல்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget