TN School Admission: மாற்றுத்திறன் சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்..! விவரம் இங்கே..!
பார்வைத்திறன் குறைபாடுடைய, செவித்திறன் குறைபாடுடைய, கை, கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட மாணவ/மாணவிகள், 5 முதல் 35 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வைத்திறன் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் என மொத்தம் 22 அரசு சிறப்புப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்கும் இடம் உட்பட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளுடன் மாணவர்களுக்கான சிறப்புப்பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த அரசு ஆசிரியர்களைக்கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது. எனவே பார்வைத்திறன் குறைபாடுடைய, செவித்திறன் குறைபாடுடைய மற்றும் கை, கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் 5 முதல் 35 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள பள்ளி விவரம்:
1. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி ரோடு, பூவிருந்தவல்லி, சென்னை-600056.
2. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புத்தூர், திருச்சி-620017
3. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் தஞ்சாவூர்-613001.
4. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, பங்களா தெரு, செவ்வாய்ப்பேட்டை, சேலம்-636002
5. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், புதியபேருந்து நிலையம், புதுக்கோட்டை-622001.
6. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, 572,கே.கே.நகர், மதுரை-625020.
7. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, நெல்லிக்குப்பம், கடலூர்-607001.
8. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, உலியம்பாளையம், தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர்-641109
9. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, இளையான்குடி சாலை, அம்பேத்கார் சிலை சமீபம், சிவகங்கை-630561.
10. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, 9/1,ரயில்வே ஸ்டேசன் ரோடு, தருமபுரி-636701.
11. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, கலெக்ட்ரேட் அஞ்சல், இலக்கியம்பட்டி, தருமபுரி-636705.
12. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர்-613001.
13. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சூலக்கரை, விருதுநகர்-626003
14. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சடாவரம் ஒரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631502
15. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீநிவாசா காலனி, சூரமங்கலம்,சேலம்.-636005
16. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சி.எம்.நகர், ஆர்.என்.புதூர், ஈரோடு-638305.
17. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, 77,கார்டன் ரோடு, உதகமண்டலம் (நீலகிரி)-643001.
18. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, 8ஏ, ஹோம் ரோடு, ஜட்ஜ் காலனி, தாம்பரம் சானிடோரியம் -600047.
19. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, 14,ஸ்ரீ நாராயணசாமி நகர், (தண்டபாணி நகர் அருகில்),வரக்கல்பட்டு அஞ்சல், நத்தப்பட்டு, கடலூர்-607109.
20. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, 66, காட்டு புதுக்குளம், புதியபேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை-622001.
21. கடுமையான இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அரசு நடுநிலைப்பள்ளி, வில்லாபுரம் ஹவுசிங் யூனிட், மதுரை-625011
22. மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம், 8ஏ. ஹோம் ரோடு, சர்வீஸ் ஹோம் பின்புறம், ஜட்ஜ் காலனி, தாம்பரம் சானிடோரியம் -600047.தாம்பரம்.