ESLC results: நாளை வெளியாகும் எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள்: பார்ப்பது எப்படி?- விவரம்
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற எட்டாம் வகுப்பு தனித்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற எட்டாம் வகுப்பு தனித்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு 10.10.2022 முதல் 14.10.2022 வரை நடைபெற்றது. பொதுத் தேர்வினை எழுதிய தனித் தேர்வர்கள் 02.11.2022 அன்று தேர்வு முடிவுகளைக் காணலாம்.
பார்ப்பது எப்படி?
எட்டாம் வகுப்பு தனித் தேர்வை எழுதிய தேர்வர்கள் நாளை பகல் 12 மணிக்குத் தேர்வு முடிவுகளைக் காணலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற Icon-ஐ க்ளிக் செய்ய வேண்டும். உடனே, அதில் DGE Result என்று தோன்றும்.
அதை க்ளிக் செய்தவுடன் ESLC Examination OCT 2022 - Private Candidates - View Result -omw Click QewWgy
தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை (DD/MM/YYYY) பதிவு செய்து, தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in
தள்ளிப்போன தேர்வுகள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதில் பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிவடைந்தன. 10, 11, 12 ஆகிய 3 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளையும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. ஜூன் 23ஆம் தேதி அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. ஜூலை 7ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதனிடையே பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது.
மாறிய தேதிகள்
10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகின.