IGNOU: தொலைதூரப் படிப்புகளில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
இக்னோ பல்கலைக்கழகத்தின் ஜூலை மாத அமர்வின் மாணவர் சேர்க்கைக்கான அகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
![IGNOU: தொலைதூரப் படிப்புகளில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு Deadline for Enrollment in Distance Courses till Oct 31: IGNOU University Notification IGNOU: தொலைதூரப் படிப்புகளில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/2f174471ee4aeb97970a39b1a7f61a601710750768267140_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இக்னோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய அரசு பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம். இங்கு தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் 56 பிராந்திய மையங்களை (RC) கொண்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, மதுரையில் பிராந்திய மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்பு
11 அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மையங்களையும் ( 6 IGNOU- Army RRC, 4 IGNOU-Navy RRC, 1- IGNOU- Assam Rifles RRC) வைத்துள்ளது. அதேபோல நாடு முழுவதும் 2 ஆயிரம் கற்போர் ஆதரவு மையத்தையும் தன்வசம் வைத்துள்ளது. இந்த நிலையில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜூலை மாத அமர்வின் மாணவர் சேர்க்கைக்கான அகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கட்டணத்தில் விலக்கு
இக்னோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி. படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம்.
அக்டோபர் 31 வரை நீட்டிப்பு
இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி நாள் அக்டோபர் மாதம் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள், அக்டோபர் 31ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்து, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேரலாம்.
எனினும் தொலைதூரப் படிப்பு குறித்த சந்தேகங்களை https://ignouadmission.samarth.edu.in/index.php/site/faq என்ற இணைப்பை க்ளிக் செய்து படித்து, தீர்த்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
* மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in/index.php/registration/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் போதிய விவரங்களை உள்ளிட்டு, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
* அதைத் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிப்பது எப்படி என்று வீடியோ வடிவில் https://www.youtube.com/watch?v=URiAvPkyffs என்ற இணைப்பில் காணலாம்.
மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: www.ignou.c.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)